சுரண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுரண்டை
சுரண்டை
இருப்பிடம்: சுரண்டை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4ஆள்கூறுகள்: 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி மாவட்டம்
வட்டம் வீரகேரளம்புதூர் வட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

35,272 (2011)

1,357/km2 (3,515/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

26 சதுர கிலோமீட்டர்கள் (10 sq mi)

132 மீட்டர்கள் (433 ft)

இணையதளம் www.townpanchayat.in/surandai

சுரண்டை (Surandai), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். இங்கு 2008 ஆம் ஆண்டு சுரண்டை அரசுக் கலைக் கல்லூரியானது, இவ்வூரில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது. 19 ஜூலை 2019 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அன்று முதல் சுரண்டை பேரூராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது


அமைவிடம்[தொகு]

சுரண்டை திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9 கி.மீ தொலைவிலும், அத்தியூத்து விளக்கில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசைக்கு அருகில் உள்ள இ. நா. விலக்கில் இருந்து 15 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் மகாத்மாகாந்தி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் 2019 ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது. சங்கரன்கோவில் , இருக்கண்குடி, புளியங்குடி , கடையநல்லூர், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையம் பகுதிகளுக்கு பேருந்து வசதி உள்ளது. சுரண்டையில் இருந்து இராஜபாளையம், மதுரைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து கான்சாபுரம் வத்திராயிருப்பு பகுதிக்கும் , தளவாய்புரம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான ஊத்துமலை, கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ.கே.புதூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக திருப்பூருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. சுரண்டையில் இருந்து தென்காசி வழியாக கேரள மாநிலம் கொட்டாரக்கரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

26 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 123 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 9511 வீடுகளும், 35272 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132 மீட்டர் (433 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. பேரூராட்சியின் இணையதளம்
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Surandai Population Census 2011
  6. "Surandai". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரண்டை&oldid=3062261" இருந்து மீள்விக்கப்பட்டது