தென்காசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தென்காசி
—  முதல் நிலை நகராட்சி  —
தென்காசி
இருப்பிடம்: தென்காசி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E / 8.97; 77.3ஆள்கூற்று: 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E / 8.97; 77.3
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ. ஆ. ப. [3]
நகராட்சி தலைவர் எஸ். பானு
மக்களவைத் தொகுதி தென்காசி
மக்களவை உறுப்பினர்

Vasanthi M(அஇஅதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

62,828 (2001)

50.27/km2 (130/சது மை)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

1,250 square kilometres (480 சது மை)

143 metres (469 ft)

தென்காசி (Tenkasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

தென்காசி நகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.

இவ்வூரின் அமைவிடம் 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E / 8.97; 77.3 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,828 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்காசி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்காசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வரலாறு[தொகு]

Tenkasi Temple.jpg

முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர், வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும் போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டுமாறு ஆணையிட்டுள்ளார். அதனை ஏற்று பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம் ஆகும். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.[6] முற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலக்கட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர். தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (கி.பி.1422-61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பலமுறை வென்றதாக கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

வணிகம்[தொகு]

தென்காசியில் வணிகம் மிகவும் முன்னேற்றம் அடைந்து காணப்படுகிறது. எனினும் எந்த தொழிற்சாலையும், பெரிய உற்பத்தி நிலையமோ இல்லை. எனினும் பல பாரம்பரியம் மிக்க துணியகங்கள் இங்கு உள்ளன. தற்போது வந்துள்ள நவீன உணவகங்களால் இந்நகரம் சிறப்படைந்துள்ளது. நகை கடைகள், பல்பொருள் அங்காடி என எல்லா வகை வணிகமும் நடைபெறுகின்றன.

கல்வி நிறுவனங்கள்[தொகு]

கல்லூரிகள்[தொகு]

 • ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி
 • சட்டநாத கரையாளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • ஸ்ரீராம் நல்லமணி யாதவா மருந்தியல் கல்லூரி
 • ஜே. பி . பொறியியல் கல்லூரி
 • ஜே. பி . கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • அருள்மகு செந்திளாண்டவர் தொழில்நுட்ப கல்லூரி

பள்ளிகள்[தொகு]

 • வீரமாமுனிவர் ஆர்.சி மேல்நிலைப்பள்ளி
 • புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி
 • இராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளி
 • செய்யத் மெட்ரிக் பள்ளி
 • அக்பர் பிரேமரி பள்ளி
 • இ. சி. இ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
 • மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
 • இந்து மேல்நிலைப் பள்ளி- கீழப்புலியூர்
 • நேரு மேல்நிலைப் பள்ளி
 • எம்.கே.வி. கந்தசாமி நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
 • ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
 • ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
 • USP மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
 • ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
 • பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
 • நல்லமணி மெட்ரிக்குலேஷன் பள்ளி
 • AG மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
 • இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
 • இசக்கி வித்யாலயா CBSC பள்ளி

வங்கிகள்[தொகு]

 • பாரத ஸ்டேட் வங்கி
 • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
 • இந்தியன் வங்கி
 • கனரா வங்கி
 • பஞ்சாப் நேஷனல் வங்கி
 • கார்ப்பரேஷன் வங்கி
 • ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர்
 • கரூர் வைஸ்யா வங்கி
 • சிட்டி யூனியன் வங்கி
 • பேங்க் ஆஃப் பரோடா
 • தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, குத்துக்கல்வலசை
 • IDBI வங்கி

தேவாலயங்கள்[தொகு]

 • புனித மிக்கேல் அதிதூதர் கத்தோலிக்க திருத்தலம் - தென்காசி கத்தோலிக்க வட்டாரத்தின் முதன்மை ஆலயமாகும். இது நூற்றாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்தது. ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இவ்விழாவில் இங்குள்ள இசுலாமியர்களும் பங்கு கொண்டு ஒற்றுமையின் சின்னமாக திகழ்கிறார்கள்.[சான்று தேவை] கேரள பக்தர்கள் அதிகம் பேர் வருவதால் மலையாள மொழியிலும் வழிபாடு நடைபெறுகிறது. சர்வேசுவரன் கோவில் என்று பிற மதத்தவரால் அழைக்கப்படுகிறது.

கோயில்கள்[தொகு]

 • தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
 • திருவிலஞ்சி குலசேகரநாதர் கோயில்
 • மேல முத்தார அம்மன் கோயில்
 • திருவிலஞ்சி பெருமான் கோவில்
 • குற்றாலநாதர் திருக்கோவில்

பள்ளிவாசல்கள்[தொகு]

 • வேம்படி மலுக்கர்ஷா ஜூம் ஆ பள்ளிவாசல்,
 • புதுமனை - சொர்ணபுரம் மஸ்ஜிதுல் முபாரக் ஜூம் ஆ பள்ளிவாசல்
 • செய்யது சுலைமான் பிர்ஜதே ஜூம் ஆ பள்ளிவாசல்,
 • தவளபுரம் ஜூம் ஆ பள்ளிவாசல்,
 • ஐந்து வர்ணம் பெரிய ஜூம் ஆ பள்ளிவாசல்,
 • இஸ்மாயீல் மீயான் ஜும்மா பள்ளிவாசல்,
 • நடுபேட்டை ஜூம் ஆ பள்ளிவாசல்,
 • மஸ்ஜிதுர் ரஹ்மான், (தமுமுக)
 • பஜார் ஜூம் ஆ பள்ளிவாசல்
 • மரைக்காயர் ஜூம் ஆ பள்ளிவாசல்,
 • ராஜ் மீயான் ஜூம் ஆ பள்ளிவாசல்,
 • ஜாமியா அல்தாபூர் ரப்பானிய அரபிக் கல்லூரி ஜூம் ஆ பள்ளிவாசல்,
 • மஸ்ஜிதுத்தவ்ஹீத் (JAQH)
 • ஆபாத் ஜூம் ஆ பள்ளிவாசல்,
 • ஜமாலியா நகர் ஜும்மா பள்ளி வாசல்,
 • மாலிக்நகர் ஜும்மா பள்ளி வாசல்,
 • ஹௌத்துல் ஆலம் ஜூம்மா பள்ளி வாசல்,
 • மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம் ஆ பள்ளிவாசல் (புதிய பேருந்து நிலையம்)
 • மஸ்ஜிதுஸ் (TNTJ)
 • மஸ்ஜிதுஸ் (TNTJ)
 • மதரஸத்துல்யா (TNTJ)

சுற்றுலா தலங்கள்[தொகு]

புகழ்பெற்ற சிலர்[தொகு]

முக்கிய இடங்கள்[தொகு]

 • ஆசாத் நகர்
 • மார்க்கெட்
 • கீழப்புலியூர்
 • S வளைவு சிக்னல்
 • நீதிமன்றம்
 • மேம்பாலம்
 • மவுண்ட் ரோடு
 • கொடிமரம்
 • தவளபுரம்
 • புதுமனை & செக்கடி
 • காட்டுபாவா கார்னர்
 • அரசு குடியிருப்பு வாரியம் காலனி
 • மேலகரம்
 • வாய்கால் பாலம்
 • யானைப்பாலம்
 • மின்சார வாரியம் சிக்னல்
 • பழைய பேருந்து நிலையம்
 • புதிய பேருந்து நிலையம்
 • நடு பெட்ரோல் பங்க்
 • ஐடிஐ

போக்குவரத்து[தொகு]

தொடருந்து போக்குவரத்து[தொகு]

தென்காசியின் மையப்பகுதியில் இரயில் நிலையம் அமைந்துள்ளது.

 • சென்னை‍‍- செங்கோட்டை- சென்னை பொதிகை அதிவிரைவு வண்டி தினமும் உண்டு.
 • சிலம்பு விரைவு வண்டி (செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை), கொல்லம் எக்ஸ்பிரஸ் (சென்னை-கொல்லம்-சென்னை), கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் (செங்கோட்டை-கோயம்புத்தூர்-செங்கோட்டை) வாரம் இருமுறை இயக்கப்படும்.
 • மதுரையிலிருந்து (வழி - விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர்) செங்கோட்டை வரையான பாசஞ்சர் ரயில் தினசரி காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளும் இயக்கப்படும்.
 • திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை (வழி - பேட்டை, சேரன்மாதேவி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, பாவூர்சத்திரம்) வரையான பாசஞ்சர் காலை மாலை என நான்கு வேளையும் உள்ளது.

பேருந்து போக்குவரத்து[தொகு]

இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை தென்காசி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா பழைய பேருந்து நிலையம்.

தென்காசியிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், ராமேஸ்வரம், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், பாபநாசம், செங்கோட்டை, சங்கரன்கோவில், கோவில்பட்டி, இராஜபாளையம், மதுரை, தேனி, குமுளி, விருதுநகர், திருப்பூர், சிவகாசி, சென்னை, கோயமுத்தூர், சேலம், வேளாங்கண்ணி, என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் கொல்லம், சங்கனாச்சேரி, திருவனந்தபுரம், புனலூர், கொட்டாரக்கரை, பத்தனம்திட்டா போன்ற முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு, திருப்பதி, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.

விமான நிலையங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. "Tenkasi". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
 5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
 6. தென்காசி தல புராணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்காசி&oldid=2558525" இருந்து மீள்விக்கப்பட்டது