சிவகிரி (தென்காசி)
சிவகிரி | |
அமைவிடம் | 9°20′N 77°26′E / 9.33°N 77.43°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி மாவட்டம் |
வட்டம் | சிவகிரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
23,040 (2011[update]) • 490/km2 (1,269/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
47 சதுர கிலோமீட்டர்கள் (18 sq mi) • 165 மீட்டர்கள் (541 ft) |
இணையதளம் | www.townpanchayat.in/sivagiri |
சிவகிரி (Sivagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்[தொகு]
இது மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை எண் 208-இல் இராஜபாளையம் தாண்டி உள்ளது. அமைந்துள்ளது. சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த ஒரு பசுமை நிறைந்த பகுதியாகும். சிவகிரி திருநெல்வேலியிலிருந்து 100 கிமீ தொலைவிலும்; அருகமைந்த தொடருந்து நிலையம் சங்கரன்கோவில் 32 கிமீ தொலைவிலும்; இராஜபாளையம் 20 கிமீ தொலைவிலும்; புளியங்குடி 18 கிமீ தொலவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
47 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 103 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6796 வீடுகளும், 23040 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5][6]
இடங்கள்[தொகு]
கல்விநிலையங்கள்[தொகு]
- சிவகிாி சேனைத்தலைவா் மேல்நிலைப் பள்ளி
- பால விநாயகா் உயா்நிலைப் பள்ளி
- விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- கமிட்டி நாடாா் உயா்நிலைப் பள்ளி
- சித்தி விநாயகா் தொடக்கப் பள்ளி
- ராஜ் நியு நா்சாி (ம) பிரைமாி பள்ளி
- எஸ்.ஆா்.பி நடுநிலைப் பள்ளி
- முத்துவீரப்பத் தேவா் தொடக்கப்பள்ளி
- பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தொடக்கப்பள்ளி குமாரபுரம் சிவகிரி
- சிங்கராயர் தொடக்கப்பள்ளி, சிவகிாி
கோயில்[தொகு]
உபயம் பறையர் சமுதாயம் அருள்மிகு ஸ்ரீ பூதைராக்கு அம்மன் திருக்கோவில் சிவகிரி
உபயம் சாம்பவர் சமுதாயம் அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரி அம்மன் திருக்கோவில் சிவகிரி
உபயம் பறையர் சமுதாயம் சீதாபிராட்டி அம்மன் திருக்கோவில் சிவகிரி
- திரௌபதியம்மன் கோயில்
- சிவகிரி பாலசுப்பிரமணியர் திருக்கோயில்.
- சந்தைக் கற்பக விநாயகர் ஆலயம்
- கருணை ஆனந்தா் ஆலயம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Sivagiri Population Census 2011
- ↑ Sivagiri Town Panchayat