கீழப்பாவூர்

ஆள்கூறுகள்: 8°54′43″N 77°23′24″E / 8.912037°N 77.390099°E / 8.912037; 77.390099
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழப்பாவூர்
—  தேர்வு நிலை பேரூராட்சி  —
கீழப்பாவூர்
இருப்பிடம்: கீழப்பாவூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°54′43″N 77°23′24″E / 8.912037°N 77.390099°E / 8.912037; 77.390099
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் ஆலங்குளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

44,462 (2011)

3,136/km2 (8,122/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 14.18 சதுர கிலோமீட்டர்கள் (5.47 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/keelappavoor

கீழப்பாவூர் (ஆங்கிலம்:Keezhapavur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இங்குள்ள நரசிம்மர் கோயில் புகழ்பெற்றதாகும்.

அமைவிடம்[தொகு]

திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்த கீழப்பாவூர் பேரூராட்சியின் கிழக்கில் 14 கிமீ தொலைவில் ஆலங்குளமும், மேற்கில் 10 கிமீ தொலைவில் தென்காசியும், வடக்கில் 6 கிமீ தொலைவில் சுரண்டையும், தெற்கில் 15 கிமீ தொலைவில் கடையம் உள்ளது.

வரலாறு[தொகு]

கீழப்பாவூருக்கு வரலாற்றில் பாகூர் ஆன சத்திரிய சிகாமணி நல்லூர் என்றும் பெயருண்டு. இதன் பெரிய குளத்திற்கு நீர் வரும் சிற்றாற்று சித்திர வாய்க்காலுக்கு வீரராஜேந்திரன் வாய்க்கால் என்றும் ஒரு பெயருண்டு. இன்று வழங்கி வரும் கீழப்பாவூர் வரலாற்றில் மிகப் பழமையான ஒன்று ராஜராஜ சோழன் வழி வந்த சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட திருகபாலீஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்) இங்கு உள்ளது. இந்த ஆலயம் 11ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுப்பப்பட்டது. இவ்வாலயம் அருகில் முனை எதிர் மோகர்கள் (போர் முனையில் ஆர்வம் கொண்டவர்கள்) கோட்டை உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

14.18 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 148 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 11934 வீடுகளும், 44,462 மக்கள்தொகையும் கொண்டது.[4]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. கீழப்பாவூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. கீழப்பாவூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழப்பாவூர்&oldid=3879630" இலிருந்து மீள்விக்கப்பட்டது