கீழப்பாவூர் நரசிம்மர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் ஒன்று. இக்கோவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரில் அமைந்துள்ளது. நரசிம்மர் பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்தியாவில், 16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களுள் இதுவும் ஒன்றாகும். மற்ற இரு கோயில்களில் ஒன்று இராஜஸ்தானிலும் மற்றொன்று தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் ஊரிலும் அமைந்துள்ளன.[1]

அமைவிடம்[தொகு]

திருநெல்வேலி-தென்காசி நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து மேற்கில் 44 கி.மீ. தொலைவிலும் தென்காசியில் இருந்து கிழக்கில் 10 கி.மீ. தொலைவிலும் உள்ள பாவூர்சத்திரம் - சுரண்டை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 2 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ள கீழப்பாவூர் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]