உள்ளடக்கத்துக்குச் செல்

பாவூர்சத்திரம்

ஆள்கூறுகள்: 8°54′52″N 77°22′40″E / 8.91444°N 77.37778°E / 8.91444; 77.37778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவூர்சத்திரம்
கிராமம்
பாவூர்சத்திரம் is located in தமிழ்நாடு
பாவூர்சத்திரம்
பாவூர்சத்திரம்
Location in Tamil Nadu, India
பாவூர்சத்திரம் is located in இந்தியா
பாவூர்சத்திரம்
பாவூர்சத்திரம்
பாவூர்சத்திரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 8°54′52″N 77°22′40″E / 8.91444°N 77.37778°E / 8.91444; 77.37778
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தென்காசி
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

பாவூர்சத்திரம் (Pavoorchatram), தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்தில், தென்காசியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பாவூர்சத்திரம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும். திருநெல்வேலி - செங்கோட்டை செல்லும் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும், தென்காசியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் பாவூர்சத்திரம் கிராமம் உள்ளது.

போக்குவரத்து

[தொகு]

தொடருந்து வசதிகள்

[தொகு]

திருநெல்வேலி, சென்னை, கொல்லம், செங்கோட்டை செல்லும் தொடருந்துகள், பாவூர்சத்திரம் தொடருந்து நிலையம் வழியாகச் செல்கின்றன. [1] இதன் அருகமைந்த பெரிய தொடருந்து நிலையம் 10 கி.மீ. தொலைவில் உள்ள தென்காசி ஆகும். [2]

பாவூர்சத்திரம் ஊரானது திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே நூற்றுக்கணக்கான பேருந்துகள் இவ்வழியில் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர கடையம், பாபநாசம், அம்பாசமுத்திரம், அகஸ்தியர் பட்டி, சுரண்டை, வீரகேரளம்புதூர் சுந்தரபாண்டியபுரம், ஆலங்குளம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

புறநகர்ப் பகுதிகளான தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கடையநல்லூர், செங்கோட்டை, புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதிகளுக்கும் கேரள மாநில போக்குவரத்து கழக சார்பிலும் பேருந்துகள் கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டா, சங்கனாச்சேரி, எர்ணாகுளம், காயம்குளம், புனலூர், கொட்டாரக்கரைப் பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.

புவியியல்

[தொகு]

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தூத்துக்குடி - கொல்லம் நெடுஞ்சாலையில், தென்காசி - திருநெல்வேலி இடையே பாவூர்சத்திரம் உள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

பாவூர்சத்திரத்தின் பொருளாதாரம் வேளாண்மையை நம்பியுள்ளது. இங்குள்ள மிகப்பெரிய காமராஜர் மொத்த வியாபார காய்கறி சந்தையிலிருந்து நாள்தோறும் அதனை சுற்றியுள்ள உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது மற்றும் பாவூர்சத்திரம் மர அறுவை ஆலைகளுக்கும், மரச் சந்தைக்கும் புகழ்பெற்றது. மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் வெட்டப்படும் தேக்கு, கோங்கு, வாகை போன்ற மரங்கள் அறுக்கப்பட்டு பாவூர்சத்திரத்தில் சந்தைப்படுத்தப்படுகிறது.

அருகமைந்த ஊர்கள்

[தொகு]

கீழப்பாவூர், சுரண்டை, இலஞ்சி, தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் மேலப்பாவூர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பாவூர்சத்திரம் தொடருந்து நிலையம்
  2. தென்காசி தொடருந்து நிலையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவூர்சத்திரம்&oldid=4375452" இலிருந்து மீள்விக்கப்பட்டது