கடையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடையம்
(Kadayam)
—  கிராமம்  —
கடையம்
(Kadayam)
இருப்பிடம்: கடையம்
(Kadayam)
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°49′55″N 77°21′25″E / 8.832°N 77.357°E / 8.832; 77.357ஆள்கூறுகள்: 8°49′55″N 77°21′25″E / 8.832°N 77.357°E / 8.832; 77.357
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் அம்பாசமுத்திரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வி. விஷ்ணு, இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர்
மொழிகள் தமிழ்


அஞ்சல் எண் : 627415
வாகன பதிவு எண் வீச்சு : TN:76
தொலைபேசி குறியீடு(கள்) : 04634xxxபெரிய நகரம் திருநெல்வேலி

அண்மைப் நகரம் அம்பாசமுத்திரம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


102 மீட்டர்கள் (335 ft)


கடையம் (ஆங்கிலம்:Kadayam) என்பது இந்தியாவில் உள்ள தமிழ் நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்த கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு வளரும் கிராமம் ஆகும். [4]

பெயர் காரணம்[தொகு]

"கடையர் பட்டி" என்ற பெயர் மறுவி "கடையம்" ஆனது. கடையர் என்பது இப்பகுதியில் முதலில் குடியேறிய இனக்குழுவின் பெயர். தற்போது இதற்கு வேறு சில கதைகள் புனையப்படுகிறது.

தமிழ் இலக்கணத்தில் முதன்மையாகக் கருதப்படுவது தொல்காப்பியம். நிலத்தில் வாழ்கின்ற மக்களெனத் தனியாகக் குறிப்பிடாமல்

    “ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை
    ஆனா வகைய திணைநிலைப் பெயரே” (தொல்.பொருள்-968)

என்று அந்தந்த நிலத்திற்குரிய, நிலப்பெயர் அடிப்படையில் மக்கட்பெயர் பகுக்கப்பட்டிருக்கும் என்று தொல்காப்பியர் கூறுவதிலிருந்து ஒவ்வொரு நிலத்திற்கும், அந்நிலத்தில் வாழ்கின்ற மக்கட்பெயரினைச் சுட்டிக்காட்டும் மரபு உள்ளதனை அறிய முடிகின்றது.

வரலாறு[தொகு]

கடையம் இந்தியாவில் தென் தமிழகத்தில் இருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டத்தின், வழியாகச் செல்லும் திருநெல்வேலி மற்றும் செங்கோட்டையை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேகமாய் வளர்கின்ற ஒரு கிராமம் ஆகும். மேலும் இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப் போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய, மகாகவி சுப்பிரமணிய பாரதி 1918 முதல் 1920 ஆம் ஆண்டு வரை இவ்வூரில் வசித்து வந்தார். மேலும் இவ்வூரைச் சேர்ந்த செல்லம்மா என்பவரை 1897 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "ஊரக வீட்டுவசதி பதிவு மற்றும் ஒப்புதல் பயனாளியின் அறிக்கை" (ஆங்கிலம்). பார்த்த நாள் சூலை 15, 2014.
  5. "தமிழ் அறிஞர் அறிவோம்: பாரதியார்" (தமிழ்). தினமணி (பெப்ரவரி 02, 2014). பார்த்த நாள் சூன் 18, 2014.

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடையம்&oldid=3310472" இருந்து மீள்விக்கப்பட்டது