புதூர் (செங்கோட்டை)
| புதூர் பேரூராட்சி | |||||
| ஆள்கூறு | |||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | தென்காசி | ||||
| வட்டம் | செங்கோட்டை | ||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||
| முதலமைச்சர் | விஜய்[2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | |||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
12,457 (2011[update]) • 375/km2 (971/sq mi) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு | 33.21 சதுர கிலோமீட்டர்கள் (12.82 sq mi) | ||||
|
குறியீடுகள்
| |||||
| இணையதளம் | www.townpanchayat.in/s-pudur | ||||
புதூர் (செ) பேரூராட்சி (ஆங்கிலம்: Pudur (S)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். பூலாங்குடியிருப்பு, லாலாக்குடியிருப்பு, இரவியதர்மபுரம், கீழப்புதூர், மேலப்புதூர், கண்ணுபுளிமெட்டு, கேசவபுரம் ஆகியவை இணைந்ததே புதூர் (செங்கோட்டை) பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]புதூர் (செ) பேரூராட்சி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில், கேரளா செல்லும் சாலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 5 கி.மீ. தொலைவில் உள்ள செங்கோட்டையில் உள்ளது. இதனருகே அமைந்த ஊர்கள் குற்றாலம், செங்கோட்டை, தென்காசி ஆரியங்காவு ஆகும்.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]33.21 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மககளவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 3,322 வீடுகளும், 12,457 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "செ. புதூர் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-25. Retrieved 2019-03-19.
- ↑ செ. புதூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல் [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Pudur (S) Population Census 2011
- ↑ Pudur (S) Town Panchayat