பரமக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பரமக்குடி
—  முதல் நிலை நகராட்சி  —
பரமக்குடி
இருப்பிடம்: பரமக்குடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°32′38″N 78°35′28″E / 9.544°N 78.591°E / 9.544; 78.591ஆள்கூறுகள்: 9°32′38″N 78°35′28″E / 9.544°N 78.591°E / 9.544; 78.591
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1][2]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[3]
மாவட்ட ஆட்சியர் திரு K. நந்த குமார் இ.ஆ.ப [4]
நகராட்சித் தலைவர் கீர்த்திகா முனியசாமி
சட்டமன்றத் தொகுதி பரமக்குடி
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். சுந்தர்ராஜ் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

1,03,776 (2011)

6,486/km2 (16,799/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 16 சதுர கிலோமீற்றர்கள் (6.2 sq mi)


பரமக்குடி (ஆங்கிலம்:Paramakudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில்இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இது வைகை நதியின் கரையில் அமைந்திருக்கிரது. மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை எண் 49 இன் மத்தியில் உள்ளது.


மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 103776 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52704 ஆண்கள், 51072 பெண்கள் ஆவார்கள். பரமக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பரமக்குடி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ingu periya nagaraga bharathi nagar amainthu ullathu.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

பரமக்குடி நகரானது ரயில் மற்றும் பேருந்து வசதிகளின் மூலம் மற்ற ஊர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கொச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை (NH 49) நகரின் குறுக்கே அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, ராமேஸ்வரம்,மதுரை,கன்னியாகுமரி,கோவை,திருப்பதி,ஒக்ஹா, புவனேஸ்வர் ,வாரனாசி உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி ரயில் வசதி உள்ளது. இங்கிருந்து பெரும்பாலான ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளன.அருகில் உள்ள விமான நிலையம் மதுரை ஆகும். இது பரமக்குடி இல் இருந்து 83கி மீ தொலைவில் உள்ளது.

வழிபாட்டு தளங்கள்[தொகு]

1. ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில்

2. ஸ்ரீ சந்திர சேகர சுவாமி கோவில் ( ஈஸ்வரன் கோவில் )

3. ஸ்ரீ முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோவில்

4. தெற்கு மசூதி

சிறப்புகள்[தொகு]

பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிவப்பு குடை மிளகாய் விளைச்சலில் சிறப்பு பெற்றதாகும். இங்கு விளைவிக்கப்படும் பருத்தி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மொத்த தமிழகத்திற்குமான மிளகாய் விலை இங்கு தான் நிர்ணயிக்கப்படுகிறது.[சான்று தேவை]

பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சௌராஷ்டிரா இன மக்கள் அசல் பட்டு ஜரிகை மற்றும் அனைத்து வித கைத்தறி சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் இந்தியா மட்டுமின்றி மலேசியா , சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்ப்படுகிறது.[சான்று தேவை]

அரசியல்[தொகு]

MLA - பரமக்குடி - தனித்தொகுதி (SC).

MP - ராமநாதபுரம் தொகுதி.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமக்குடி&oldid=1876569" இருந்து மீள்விக்கப்பட்டது