உள்ளடக்கத்துக்குச் செல்

திருவாடானை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவாடானை வட்டம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம், திருவாடானையில் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் தொண்டி, திருவாடானை, புல்லூர், மங்கலக்குடி என 4 உள்வட்டங்களும், நம்புதாளை திருவாடானை,சுந்தரபாண்டியன்பட்டினம், சிறுகம்பையூர், ஓரியூர், பாண்டுகுடி அஞ்சுகோட்டை, கல்லூர், கூக்குடி, தேலூர், அரசத்தூர், பெரியகீரமங்கலம், கோடனூர், கடம்பூர், தளிர்மருங்கூர் ஏ/பி, முகில்தகம், ஆண்டவூரணி, கலியாநகரி, வெள்ளையும், டி.நாகனி, புள்ளக்கடம்பன், அரும்பூர், அந்தியூர், அச்சங்குடி, குஞ்சாங்குளம், மங்கலக்குடி, பழங்குளம் , நெய்வயல், கொடிப்பாங்கு, குளத்தூர் B/D, முள்ளிமுனை, கட்டவிளாகம், நீலமால்கியமங்கலம், புதுப்பட்டினம், திருவெற்றியூர், வட்டானம், கட்டிவயல், கருமொழி,பனஞ்சயல்,பாகனூர், கரங்காடு, சிறுமலைக்கோட்டை , நாகரிகாத்தான், துத்தாக்குடி, ஓரிக்கோட்டை, மாவூர், பதனக்குடி என 41 கிராம ஊராட்சிகளும் உள்ளது. [2] மேலும் திருவாடானை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 212,029 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 106,094 ஆண்களும், 105,935 பெண்களும் உள்ளனர். 50,212 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 82.5% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 79.81% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 21680 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 954 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 41,209 மற்றும் 212 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 69.95% , இசுலாமியர்கள் 17.52%, கிறித்தவர்கள் 12.18% மற்றும் பிறர் 0.35% ஆகவுள்ளனர்.[3]

புகழ் பெற்ற கோயில்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாடானை_வட்டம்&oldid=3823661" இலிருந்து மீள்விக்கப்பட்டது