உள்ளடக்கத்துக்குச் செல்

அக்னி தீர்த்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்னி தீர்த்தம்
அக்னி தீர்த்தம்

அக்னி தீர்த்தம் இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்திலுள்ளது. இது இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் அமைந்துள்ள 23 தீர்த்தங்களுள் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானோர் நீராடுகின்றனர்.[1]

உப புராணங்களில்[தொகு]

சேது புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் நாரத புராணங்களில் அக்னி தீர்த்தத்தை குறித்துள்ளது.[1]

அமைவிடம்[தொகு]

இராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 56 கி.மீ தொலைவிலும்,மதுரையிலிருந்து 168 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இராமேசுவரம் இராமநாத சுவாமி திருக்கோவிலின் நேர் கிழக்கே வங்காள விரிகுடா கடலினுள் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இராமேசுவரம் தீவின் தென் கோடியான தனுசுகோடியின் கிழக்கு கடற்கரைப் பகுதியே புராணங்களில் அக்னி தீர்த்தமாக் கூறப்பட்டுள்ளது.இங்கு பித்ரு தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது.இங்கிருந்து நீரை எடுத்து ஆதி சங்கரர் தற்போதுள்ள அக்னி தீர்த்தத்தில் பிரதிட்டை செய்தார்.

இயற்கை எழில்[தொகு]

தனுசுகோடியின் கிழக்கே வங்காளவிரிகுடாவில் மூன்று பக்கம் கடலால் சூழ்ப்பட்டும் ஒரு புறம் நிலமாகவும் அமைந்துள்ளது.இந்த இடம் அமைந்துள்ள இடம் சதுப்பு நிலமாக உள்ளது.சில நேரங்களிள் கடல் அலை அதிகமாகும் பொழுது இந்த நிலப்பரப்பு நீருக்குள் மூழ்கி விடுகிறது.இங்கிருந்து இலங்கை மிக அருகில் உள்ளது.கழுத்தளவு நீரில் இறங்கி நடந்தே இலங்கை சென்று விடலாம் என்று நம்பப்படுகிறது.1964ல் இங்கு ஏற்பட்ட புயலுக்குப் பின் இந்த கடல் பகுதி ஆபத்து நிறைந்த கடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Seturaman (2001), p. 221.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னி_தீர்த்தம்&oldid=3592338" இலிருந்து மீள்விக்கப்பட்டது