தொண்டி (பேரூராட்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொண்டி (இக்காலம்)
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
வட்டம் திருவாடானை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

18

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு [convert: invalid number]
இணையதளம் www.townpanchayat.in/thondi

தொண்டி (ஆங்கிலம்:Thondi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தின் 7 பேரூராட்சிகளில் ஒன்றாகும். இது திருவாடானை வட்டத்தில் உள்ளது. இது 12 வருவாய் கிராமங்களைக் கொண்டது. இது இராமநாதபுரத்திலிருந்து 44 கிமீ தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 58 கிமீ தொலைவிலும், தேவக்கோட்டை ரஸ்தா தொடருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவிலும் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,859 வீடுகளும், 18,465 மக்கள்தொகையும் கொண்டது. [4]

இது 10.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 132 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருவாடானை (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

வரலாறு[தொகு]

பாண்டிய மன்னன் இறந்த பிறகு அரியணைகாக அவரது மகன்கள் குலசேகர பாண்டியனும் பராக்கிரம பாண்டியனும் போர் புரிந்தனர். அதில் பராக்கிரம பாண்டியன் கொல்லபட்டான். இதை கேள்விபட்ட இலங்கை மன்னன் பராக்கிரம பாபு என்பவன் தன் பெயர் கொண்டவனை கொன்ற பாண்டியனை கொல்லுவதற்கு படை எடுத்து வந்தான். பாண்டிய நாட்டின் பல இடங்களை பிடித்து விட்டான். சுந்தரபாண்டிய மன்னன் சிறப்பாக போர் புரிந்தான். ஆனால் போரில் அவனும் கொல்லப்பட்டான் . அவன் இறந்த இடம் இன்று சுந்தர பாண்டியன் பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. இறுதியில் பாண்டியன் சோழர்களின் உதவியை நாடுகிறான். சோழன் தன ஒரு படையை தொண்டிக்கு அனுப்பி பராக்கிரம பாபுவை வென்று பாண்டியனுக்கு நாட்டை மீட்டுதருகிறான். பாண்டிய மன்னன் சோழ மன்னனிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறான் இலங்கை மீண்டும் தன மீது போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது அதனால் உங்கள் படைகளை இங்கே காவலுக்கு வேண்டும் என்றான். சோழ மன்னனும் தன படையை காவலுக்கு வைத்து நாடு திரும்பினான் சோழ மன்னன். அந்த படையினர் தான் தொண்டியின் பூர்விக மக்கள் இன்றும் உள்ளனர். அவர்கள் படை நடத்தியதால் படையாட்சி என்று அழைக்கபடுகிறார்கள்.[சான்று தேவை]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. தொண்டி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. தொண்டி பேரூராட்சியின் இணையதளம்

தொண்டி பற்றிய சங்ககாலச் செய்திகள்[தொகு]

அம்மூவனார் என்னும் புலவர் இந்த ஊரின் அழகைத் அகநானூற்றுத் தலைவி ஒருத்தியின் அழகோடு ஒப்பிடுகிறார். இந்த ஊரிலுள்ள மீனவர் கீழைக்காற்று அடிக்கும்போது தம் பழைய திமில் படகுகளைப் புதுப்பித்துக்கொள்வார்களாம். கடலில் பிடித்துக்கொண்டுவந்த மீன்களை மணல் மேட்டில் கொட்டி ஊருக்குப் பகிர்ந்து கொடுப்பார்களாம். (அகநானூறு 10)

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டி_(பேரூராட்சி)&oldid=2675474" இருந்து மீள்விக்கப்பட்டது