வாலிநோக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாலிநோக்கம்
வாலிநோக்கம்
இருப்பிடம்: வாலிநோக்கம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°09′47″N 78°38′46″E / 9.163°N 78.646°E / 9.163; 78.646ஆள்கூறுகள்: 9°09′47″N 78°38′46″E / 9.163°N 78.646°E / 9.163; 78.646
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவாத், இ. ஆ. ப [3]
பெருந்தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


வாலிநோக்கம் (ஆங்கிலம்:Valinokkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி வருவாய் கோட்டம், கடலாடி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். உப்பு, சிப்பி பாறைகள், விசாலமான மணல் பரப்பு ஆகிய சிறப்புகளை தன்னகத்தே கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் வாலிநோக்கம் கடற்கரையின்அழகை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இராமாயணத்தில், இக்கடற்கரையிலிருந்து இலங்கையை வாலி உற்றுநோக்கியதால் இவ்வூர் வாலிநோக்கம் எனப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது . நீண்ட, விசாலமான மணல் பரப்பு, சிப்பி, உப்பு பாறைகள், வாலிமுனை, யானைபார் தீவுகளை தன்னகத்தே கொண்ட எழில் கொஞ்சும் கடற்கரை பகுதியாக திகழ்கிறது.

அமைவிடம்[தொகு]

தூத்துக்குடி நகரில் இருந்து வடகிழக்கே அதன் அளவாக 90 கி.மீ. தூரத்திலும் இராமநாதபுரம் நகரில் இருந்து தென்மேற்காக 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. மூன்று புறம் கடல் சூழ, அழகிய அமைதியான சூழலில் அமைந்துள்ளது[4]. கடற்கரையில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. நல்லதண்ணீர் தீவு இதன் அருகே அமைந்துள்ளது.

மக்கள்[தொகு]

இங்கு சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் வரை வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இங்கு பெரிய பள்ளிவாசல் உள்ளது.

வாலிநோக்கம் மூன்று புறம் கடல் சூழ அமைந்துள்ள எழில்மிகு கிராமமாகும். கடற்கரையில் கிடைக்கும் சுவைமிகு நல்ல தண்ணீரும், கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் நல்லதண்ணீர் தீவும் இந்த ஊருக்கு இறைவன் தந்த அருட்கொடையாகும். இந்த ஊர் பாரம்பரியமிக்க பழமைவாய்ந்த ஊர் என்பதற்கு இங்குள்ள பெரிய பள்ளிவாசல் சான்றாகத் திகழ்கிறது. இங்குபல ஆயிரம் குடும்பங்கள் வரை வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாகவும் மீன்பிடித்தொழிலை பிரதானமாக கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

தொழில்[தொகு]

உப்பு உற்பத்தி,[5] மற்றும் மீன்பிடித்தொழில் பிரதானமாகும் [6] வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

அரசு நிறுவனங்கள்[தொகு]

Marakkanam Salt Pans.JPG
Shipbreaking Yard Bhatiari, Sitakunda.jpg
  • தமிழ்நாடுஅரசு உப்பு உற்பத்தி நிறுவனம்[7]
  • துறைமுகம், இங்குள்ள கப்பல் உடைப்பு நிறுவனம் தற்போது செயல்பாட்டில் இல்லை[8]

நிர்வாக அலகு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-06-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-01-03 அன்று பார்க்கப்பட்டது.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-09-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-01-03 அன்று பார்க்கப்பட்டது.
  6. http://www.thehindu.com/news/states/tamil-nadu/fishing-holiday-ends-today/article441637.ece
  7. http://www.tnsalt.com/index.php
  8. http://www.tnmaritime.com/goverment_ports.php?port=5
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலிநோக்கம்&oldid=3571274" இருந்து மீள்விக்கப்பட்டது