முதுகுளத்தூர்
| முதுகுளத்தூர் | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| வட்டம் | முதுகுளத்தூர் |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3] |
| சட்டமன்றத் தொகுதி | முதுகுளத்தூர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
14,789 (2011[update]) • 640/km2 (1,658/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 23.10 சதுர கிலோமீட்டர்கள் (8.92 sq mi) |
குறிப்புகள்
| |
முதுகுளத்தூர் (Mudukulathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும்.[4] இது இராமநாதபுரத்திலிருந்து 45 கி.மீ. தொலைவிலும், பரமக்குடியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது. முதுகுளத்தூர் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த பேரூராட்சியில் 3,559 வீடுகளும், 14,789 மக்கள்தொகையும் கொண்டது.[5]
இது 23.10 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 87 தெருக்களும் கொண்ட இந்த பேரூராட்சி முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6] [7]
முக்கிய பயிர்
[தொகு]இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் , மல்லி அதிகமாக விளைகின்றன. இது வறட்சி மாவட்டம் என்பதால் இங்கு சீமைக் கருவேல மரம் (விறகுகளால் தயாரிக்கப்படும் அடுப்புக்கரி தயாரிக்கும் பொருட்டு) முகனையாக வளர்க்கப்படுகிறது . பனைமரங்கள் அதிகம் உள்ள பகுதியால் பனை விவசாயம் மேற்கொள்ள படுகிறது . கோடை காலங்களில் நுங்கு விற்பனை மேற்கொள்ள படுகிறது .
இந்து சமய கோவில்கள்
[தொகு]1. அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் திருக்கோவில்
★ யாதவர் வாகைகுளம் செல்வநாயகபுரம் முதுகுளத்தூர் மற்றும் தூரி ஆகிய கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட திருக்கோவில் ஆகும்
★ திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை கோவிலில் அருள் பாளிக்கின்ற அம்மனுக்கு பூச்சொறிதல் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும் இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்
வார சந்தை
[தொகு]வாரத்தில் வியாழக்கிழமைகளில் சந்தை நடைபெறும் . அதில் சுற்று வட்டார ஊர்களில் இருந்து மக்கள் கலந்து கொள்வார்கள் . வீட்டிற்கு தேவையான அனைத்து வகையான சாமான்களும் கிடைக்கும் . சுமார் அரை நூற்றாண்டாக இயங்கி வருகிறது . இது முதுகுளத்தூரின் பாரம்பரியமாக உள்ளது .
கல்வி நிலையங்கள்
[தொகு]- அரசு மேல் நிலைப்பள்ளி
- பள்ளிவாசல் மேல் நிலை ப்பள்ளி
- டி. இ. எல். சி. உயர்நிலைப் பள்ளி
- பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி
- பள்ளிவாசல் தொடக்கப் பள்ளி
- கண்ணா மெட்ரிக் பள்ளி
- பள்ளிவாசல் மெட்ரிக் & மழலையர் பள்ளி
- அரசு கலை அறிவியல் கல்லூரி
- சோனை மீனாள் கலை அறிவியல் கல்லூரி, வெண்ணீர்வாய்க்கால்
- அரசு தொழிற்பயிற்சி கூடம்
போக்குவரத்து வசதி
[தொகு]முதுகுளத்தூர் நகரில் கமுதி செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இந்த பணிமனையிலிருந்து பரமக்குடி, கமுதி, அருப்புக்கோட்டை, இராமநாதபுரம், சாயல்குடி, பட்டுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் என பல்வேறு முக்கிய நகரங்களுக்கும், அருகில் உள்ள கிராமப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025.
- ↑ முதுகுளத்தூர் நகராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ "ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1228342-ramanathapuram-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025.
- ↑ முதுகுளத்தூர் பேரூராட்சியின் இணையதளம்