கமுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கமுதி
கமுதி
இருப்பிடம்: கமுதி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°25′11″N 78°22′12″E / 9.4197°N 78.37°E / 9.4197; 78.37ஆள்கூற்று: 9°25′11″N 78°22′12″E / 9.4197°N 78.37°E / 9.4197; 78.37
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
வட்டம் கமுதி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

14,754 (2011)

2,893/km2 (7,493/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.10 சதுர கிலோமீட்டர்கள் (1.97 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kamuthi


கமுதி (ஆங்கிலம்:Kamuthi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் பேரூராட்சி ஆகும். ஒன்றாகும். உலகின் பெரிய சூரியசக்தி மின்நிலையங்களுள் ஒன்று கமுதியில் செயல்பட்டு வருகிறது.[4][5]

கமுதி பேரூராட்சி இராமநாதபுரத்திலிருந்து 85 கிமீ தொலைவிலும், மானாமதுரையிலிருந்து 39 கிமீ தொலைவில் உள்ளது. பரமக்குடி, மதுரை, அருப்புக்கோட்டை, இராமநாதபுரத்திலிருந்து கமுதிக்கு பேருந்து வசதிகள் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,379 வீடுகளும், 14,754 மக்கள்தொகையும் கொண்டது. [6]

இது 5.10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 101 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[7]

கமுதி சந்தை[தொகு]

அம்பேத்கர் வாரச்சந்தை என்ற பெயரில் கமுதியில் வாராவாரம் செவ்வாய் கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர்.

கல்விக்கூடங்கள்[தொகு]

கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,kalaviruthi high school, கெளரவ உயர்நிலைப்பள்ளி ஆகியவை மிகவும் பெயர்பெற்றவை. சேகனாதபுரம் க.உ.ஓ ஆரம்பப்பள்ளி பல ஆசிரியர்களை உருவாக்கிய பள்ளி. கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் திரு.உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி உள்ளது.

ஆலயங்கள்[தொகு]

கமுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது. மேலும் கமுதி சத்திரிய நாடார்கள் உறவின்முறையினரால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் வங்காருபுரம் எனும் கிராமத்தில் உள்ள ‌‌‌பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.சேகனாதபுரம் அருகில் மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று இருந்தது .அது பிற்காலத்தில் வெறும் கட்டடம் மட்டுமே உள்ளது. அதே ஊரில் முசுலிம் மக்கள், இந்து சேர்த்து வழிபட கூடிய காதரியம்மன் தர்கா ஒன்று உள்ளது கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுகிறது.மேலும் இங்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பதுவை புனிதர் அந்தோணியாரின் ஆலயம் உள்ளது.இந்த ஆலயம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இந்த ஆலயத்தில் ஜீன் மாதம் முதலாம் திங்கள் கொடியேற்றபட்டு திருவிழா நடைபெறும்.கிறிஸ்தவர்கள் மட்டும் அல்லாது மற்ற சமய மக்களும் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.இந்த ஆலயத்தின் உள்ளே 1856 ஆண்டு இறந்த வெளிநாட்டு கிறிஸ்தவ மதபோதகர் கல்லறையும் உள்ளது.அவரின் பெயர் தந்தை சர்டூரியா. கர்த்தநாதர் சுவாமி என்று இவரை அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர்.அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இங்குள்ள மக்களின் காலரா நோயை போக்க அரும்பாடுபட்டதாகவும்,இறுதியில் அவரையே காலரா நோய் தாக்க அவர் இறந்தார்.அவரின் உடல் இங்கே கமுதி ஆலயத்தினுள் உள்ளது.இவ்வாறு பல சிறப்புகளை உள்ளடக்கியது இந்த ஆலயம்.


பிரசித்தி பெற்ற விழாக்கள்[தொகு]

வருடாவருடம் பங்குனி மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. சுமார் மூன்று வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், தீ மிதித்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்[தொகு]

கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டது. இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை சிலகாலம் இக்கோட்டையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது.

விக்கி மேப்பியாவில் கமுதிக் கோட்டை[தொகு]

நீர் நிலைகள்[தொகு]

கமுதியில் குண்டாறு பாய்கிறது. மேலும் கண்ணார்பட்டி ஊருணி, செட்டிஊருணி என நீர்நிலைகள் இருந்தாலும், அவை மழைக்காலத்தில் மட்டுமே நிறைகின்றன.

மேலும் பார்க்கவும்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. Kamuthi: The world's largest solar power project
  5. Kamuthi Solar Power Project
  6. கமுதி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  7. கமுதி பேரூராட்சியின் இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமுதி&oldid=2812078" இருந்து மீள்விக்கப்பட்டது