சாயல்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாயல்குடி
சாயல்குடி
இருப்பிடம்: சாயல்குடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°28′08″N 78°26′42″E / 9.469°N 78.445°E / 9.469; 78.445ஆள்கூற்று: 9°28′08″N 78°26′42″E / 9.469°N 78.445°E / 9.469; 78.445
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் இ. ஆ. ப. [3]
பேரூராட்சி தலைவர் ராஜலக்ஷ்மிகண்ணப்பன்
மக்கள் தொகை 12 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

சாயல்குடி (Sayalgudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,049 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சாயல்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சாயல்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அகழ்வாராய்ச்சி[தொகு]

இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உருக்காலைகள் அமைந்திருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சங்க காலத்தைச் சேர்ந்த இரும்பாலைகளின் உருக்குலைந்த பகுதிகள் கிடைக்கப்பட்டுள்ளன. இரும்புத்தாது, உடைந்த பானையின் ஓடுகள், குறியீடுள்ள பானை ஓடுகள், சுடுமண்ணால் ஆன தாய்த் தெய்வ பொம்மை, கெண்டியின் மூக்குப்பகுதி என பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. உடமைக்குறி என நம்பப்படும் அடையாளங்களுடன் சில ஓடுகளும் கிடைத்துள்ளன.[5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  5. "சாயல்குடி அருகே 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை: வரலாற்றை வெளிக்கொணர அகழாய்வு செய்ய கோரிக்கை". பார்த்த நாள் 6 ஆகத்து 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாயல்குடி&oldid=2208666" இருந்து மீள்விக்கப்பட்டது