கோதண்டராமர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோதண்டராமர் கோயில்

கோதண்டராமர் கோயில் (Kothandaramaswamy Temple), ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கு நடுவில் உள்ள தனுஷ்கோடி தீவில் அமைந்துள்ளது.

மரபு வரலாறு[தொகு]

இராமாயணத்தில், விபீசணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் அறிவுரை கூறினார். ராவணன் அதை ஏற்க மறுத்ததுடன், வீடணனை காலால் மிதிக்கச் சென்றார் .இதனால் வெறுப்புற்ற வீடணன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமரிடம் சரணாகதி அடைந்தார். வீடணனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். வீடணனை பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு அமைக்கப்பட்ட கோயில் கோதண்டராமர் கோயில் ஆகும். இக்கோயிலில் ராமபிரான் அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறார்.

இராமாயணத் திருவிழா[தொகு]

கோதண்டராமர் கோயிலில் ராமர், இலக்குவன், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் உற்சவம் நடைபெறும்.

இராமாயணத் திருவிழாவின் போது, ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன் ராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், ராமர் லிங்கப் பிரதிஷ்டை செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தி காண்பிக்கப்படும்.[1]

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/New.php?id=906
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோதண்டராமர்_கோயில்&oldid=3805380" இலிருந்து மீள்விக்கப்பட்டது