இராஜசிங்கமங்கலம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராஜசிங்கமங்கலம் வட்டம், அல்லது ஆர். எஸ். மங்கலம் வட்டம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இவ்வட்டத்தில் இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.இராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என கூறப்படும் தனி சிறப்பும் திருவாடானை மற்றும் ஆர். எஸ். மங்கலம் தாலுகாவிற்கு உண்டு.

தோற்றம்[தொகு]

திருவாடானை வட்டம் மற்றும் பரமக்குடி வட்டங்களை சீரமைத்து, இராஜசிங்கமங்கலத்தைத் நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு, இராஜசிங்கமங்கலம் வருவாய் வட்டத்தை தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.[2]

உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்[தொகு]

இராஜசிங்கமங்கலம் வட்டம் ஆனந்தூர், சோழந்தூர், மற்றும் இராஜசிங்கமங்கலம் என மூன்று உள்வட்டங்களும், 39 வருவாய் கிராமங்களும் கொண்டது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராமநாதபுர மாவட்ட வருவாய் வட்டங்கள்
  2. தமிழக அரசு செய்தி வெளியீடு எண்:551 - நாள் 16.08.2018
  3. இராஜசிங்கமங்கலத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்

வெளி இணைப்புகள்[தொகு]