இராஜசிங்கமங்கலம்
இராஜசிங்கமங்கலம் | |||
அமைவிடம் | 9°44′N 78°54′E / 9.74°N 78.90°E | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | இராமநாதபுரம் | ||
வட்டம் | இராஜசிங்கமங்கலம் வட்டம் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | பி. விஷ்ணு சந்திரன், இ. ஆ. ப [3] | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
14,565 (2011[update]) • 1,099/km2 (2,846/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 13.25 சதுர கிலோமீட்டர்கள் (5.12 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/r-s-mangalam |
இராஜசிங்கமங்கலம் (Raja Singa Mangalam) அல்லது ஆர். எஸ். மங்கலம் (R.S.Mangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராஜசிங்கமங்கலம் வட்டத்தின் தலைமையிடமும்/ பேரூராட்சி ஆகும். இவ்வூர் இராமநாதபுரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் வடக்கே உள்ளது. இவ்வூரில் இராஜசிங்க மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது.
மக்கள் தொகை[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,481 வீடுகளும், 14,565 மக்கள்தொகையும் கொண்டது.[4]
இது 13.25 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்ட ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சியானது திருவாடானை (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
சிறப்பு[தொகு]
இங்கு தமிழகத்திலேயே இரண்டாவதும் இராமநாதபுரம் மாவட்டத்தில் முதலும் ஆன மிகப் பெரிய கண்மாயான இராஜசிங்கமங்கலம் கண்மாய் உள்ளது.[6][7][8]. நாரை தாவாத நாற்பதெட்டு மடை உள்ள கண்மாய் எனும் சிறப்பு இதற்கு உண்டு. இக்கண்மாய் 1100 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மூன்றாம் ராஜ சிம்ம பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்டது. இங்கு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெறுகின்றன. அருகில் உள்ள கிராமங்கள் முழுவதற்கும் இதுதான் பெரிய ஊர். இங்கு மருத்துவ வசதி, கல்வி வசதி, போக்குவரத்து வசதி ஆகிய அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் உள்ளன.
இவ்வூர் சேதுபதி மன்னர் காலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்பட்டது என்பதை இராமநாதபுரம் மாவட்ட வரலாற்று நூலில் எஸ்.எம். கமால் குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு[தொகு]
இந்த ஊரின் வரலாறு:
மங்கலம் என்ற சொல் நற்பயன், அதிர்ஷ்டம் என்னும் பொருள்களில் வழங்கி மக்களின் குடியிருப்புகளையும் குறிக்கத் தொடங்கியது. இடைக்காலத்தில் பிராமணர்களின் குடியிருப்புகள் மங்கலம் எனக் குறிக்கப்பட்டன. அக்கால அரசர்கள் பிராமணர்களுக்கு நிலங்களைக் கொடையாகத் தரும் போது தம் பெயர் விளங்க தம் பெயருடன் ‘மங்கலம்’ என இணைத்துப் பெயர் சூட்டி ஊரமைத்துள்ளனர்.
அந்த வகையில் கி.பி. 900 முதல் கி.பி. 920 வரை பாண்டிய நாட்டை ஆண்ட மூன்றாம் ராஜசிம்மன், ராஜசிம்மமங்கலம் என தனது பெயரில் ஊரையும் அமைத்து பிராமணர்களுக்கு கொடையாக வழங்கியதை செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
தற்பொழுது அந்த பெயர் மருவி இராஜசிங்கமங்கலம் என பெயர் உருவானது. அதன் சுருக்கமே ஆர்.எஸ்.மங்கலம்.
சுற்றி உள்ள முக்கிய ஊர்கள்[தொகு]
இதனைச் சுற்றியுள்ள முக்கிய ஊர்கள்:
இராமநாதபுரம் (35 கி.மீ.)
பரமக்குடி (37 கி.மீ.)
தொண்டி (29 கி.மீ.)
சித்தார்கோட்டை (29 கி.மீ.)
நம்புதாளை (27 கி.மீ.)
இளையாங்குடி (26 கி.மீ.)
திருவாடானை (21 கி.மீ.)
தேவிபட்டிணம் (21 கி.மீ.)
திருப்பாலைக்குடி (17 கி.மீ.)
உப்பூர் (11 கி.மீ.)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ ஆர். எஸ். மங்கலம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ "ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சியின் இணையதளம்". http://www.townpanchayat.in/r-s-mangalam.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.hindu.com/2005/12/02/stories/2005120208310300.htm.
- ↑ http://www.thehindu.com/todays-paper/article3511108.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.hindu.com/2006/12/21/stories/2006122113400300.htm.