உள்ளடக்கத்துக்குச் செல்

திருவாடானை

ஆள்கூறுகள்: 9°46′48″N 78°55′16″E / 9.780°N 78.921°E / 9.780; 78.921
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவாடானை
—  கிராமம்  —
திருவாடானை
அமைவிடம்: திருவாடானை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°46′48″N 78°55′16″E / 9.780°N 78.921°E / 9.780; 78.921
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
வட்டம் திருவாடானை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 9,702 (2011)
பாலின விகிதம் 974 /
கல்வியறிவு

• ஆண்
• பெண்

84.60%% 

• 91.55%%
• 77.43%%

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
தொலைவு(கள்)
குறியீடுகள்


திருவாடானை (Tiruvadanai) என்பது தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர் ஆகும். இது திருவாடானை வட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், திருவாடானை ஊராட்சியின் நிர்வாகத் தலைமையிடமாகவும் அமைந்துள்ளது. இவ்விடத்தில் புகழ்பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இவ்வூர் அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில், தொண்டி, ஓரியூர் முதலியன உள்ளன. திருவாடனையின் சங்ககாலப் பெயர் அட்டவாயில் என்பதாகும். திருவாடனை சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]

அமைவிடம்

[தொகு]

திருவாடனை மதுரையிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் தேவகோட்டையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் இராமநாதபுரம் நகரத்திற்கு வடக்கே 53 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருவாடானையில் 2,426 வீடுகளில் 9,702 மக்கள் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் 4916 ஆண்கள், 4786 பெண்கள் ஆவார்கள். திருவாடானை மக்களின் சராசரி கல்வியறிவு 84.60% ஆகும். இதில் ஆண்களின் சராசரி எழுத்தறிவு 91.55%, பெண்களின் எழுத்தறிவு 77.43% ஆகும். திருவாடானை மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டோர் 957 பேர் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,907 மற்றும் 15 ஆகவுள்ளனர்.[5]

சிறப்புகள்

[தொகு]

சூரியனால் வழிபடப்பட்டதாக கருதப்படும் ஆடானை நாதர் கோவில் என அழைக்கப்படும் சிவன் கோவில் இங்கு உண்டு. திருவாடானையில் அமைந்துள்ள ஆதிரத்தினேசுவரர் கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1228342-ramanathapuram-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025. 
  5. Thiruvadanai Population Census 2011

வெளி இணைப்புகள்

[தொகு]

தல வரலாறு பரணிடப்பட்டது 2011-11-18 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாடானை&oldid=4356257" இலிருந்து மீள்விக்கப்பட்டது