திரு
திரு என்பது ஒரு தமிழ்ச் சொல்லாகும். இச்சொல் ஒருவரைச் சிறப்பிப்பதற்கு முன்னொட்டாகப் பயன்படுத்தப்படுகிறது. திரு என்ற சொல் தமிழர் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் பரவலாகப் பயன்படுகிறது.
தமிழ்நாட்டில் பொதுப் பயன்பாட்டில்
[தொகு]சென்னையில் 1937 ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சி அமைந்தபோது, அரசின் அஞ்சல்களில் அனைவருக்கும் ’ஸ்ரீ’ எனும் அடைமொழிச் சொல்லைப் பயன்படுத்தக் கூறி ஆணை இட்டது. இது எதிர்ப்பை ஏற்படுத்தியது.1940 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நான்காம் நாள் திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ராமசாமி தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16ஆவது மாகாண மாநாடு ’ஸ்ரீ’ எனும் வார்த்தைக்குப் பதில் தமிழின் ’திரு’ எனும் தமிழ் வார்த்தையையே பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வேண்டிக்கொண்டது. [1]
உயர் திரு
[தொகு]ஒருவரைக் கூடுதல் சிறப்புடன் அழைப்பதற்கு அல்லது எழுதுவதற்கு உயர் திரு எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது.
சிங்களத் திரு
[தொகு]தமிழர் பயன்பாட்டில் உள்ள "திரு" எனும் சொல்லுக்கு நிகரான ஒரு சொல்லாக, சிங்களத்தில் பயன்படுத்தப்படும் சொல் க'ரு (Garu) என்பதாகும். இச்சொல்லைக் கூடுதல் சிறப்புடன் ஒருவரை அழைக்க அல்லது எழுதிட அதி'கரு என்று பயன்படுத்துகின்றனர்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 577-578