உத்தரகோசமங்கை
அருள்மிகு உத்தரகோசமங்கை மங்களேசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | உத்தரகோசமங்கை |
பெயர்: | அருள்மிகு உத்தரகோசமங்கை மங்களேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருஉத்திரகோசமங்கை 623533 |
மாவட்டம்: | ராமநாதபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மங்களநாதர் சுவாமி |
தாயார்: | மங்களேஸ்வரி அம்மன் |
சிறப்பு திருவிழாக்கள்: | 8ம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேர்விழா, மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் (திருவாதிரை) |
பாடல் | |
பாடியவர்கள்: | மாணிக்கவாசகர் |
திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் அல்லது உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இங்கு மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் சிவன் கோவில் எனும் பிரபலமான இந்து கோவில் உள்ளது. ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.[2][3]
அமைவிடம்[தொகு]
மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே, வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, இவ்வூரை அடையலாம்.
- மதுரை-மண்டபம் சாலையில் இராமநாதபுரத்திலிருந்து மேற்கே 10 கி.மீ
- பரமக்குடியிலிருந்து கிழக்கே 32 கி.மீ
சிறப்பு[தொகு]
இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவபெருமானைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிட்டு திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினைக் கொண்டது.[4] தேவாரப் பாடல்கள் இதனைப் பாடவில்லை.
இக்கோயிலின் தலமரம் இலந்தை. ‘இலவந்திகை’ என்னும் சொல்லே மருவி ‘இலந்தை’ எனக் கருதுகின்றனர். இதனால் சங்ககால ‘இலவந்திகைப்பள்ளி’ இக்கால உத்தரகோசமங்கை எனக் கருதுகின்றனர்.
இவ்வூர் சிவனுக்கு வழிபாட்டுக்கு உரியதல்லாமல் போன தாழம்பூவும் சாத்தப்படுகிறது. மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிபட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாக ஒரு கதை உண்டு.
கோயில் அமைப்பு[தொகு]
இக்கோயிலில் மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் சன்னதிகளும், நடராஜர், சுயம்புலிங்கம், பைரவர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பாலபைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தைக் கொண்டுள்ளது. கையை நுழைத்து, இந்தப் பந்தை நகர்த்த முடியும்.
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[5]
பூசைகள்[தொகு]
இக்கோயிலில் காரணாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] சித்திரை, மார்கழி மாதம் 8ம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேர்விழா, மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் (திருவாதிரை) முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழித் திருவாதிரையில் அன்று ஒரு நாள் மட்டுமே நடராசருக்கு சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிசேகங்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் சித்திரை தேரோட்டம் தேரோட்டம் நடைபெறுகிறது. இலலை திருவிழாவாக நடைபெறுகிறது. காரணாகம முறைப்படி வழிபாடு நடத்தபடுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.
மேற்கோள்கள்[தொகு]
![]() |
த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க. |
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பெப்ரவரி 19, 2017 அன்று பார்க்கப்பட்டது. External link in
|publisher=
(உதவி) - ↑ உத்திரகோச மங்கை
- ↑ "http://www.hindu.com/2007/01/03/stories/2007010310060300.htm". 2013-12-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-11-18 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி); External link in|title=
(உதவி) - ↑ வீ. ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28, அம்மையப்பா இல்லம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014, ப.10
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பெப்ரவரி 19, 2017 அன்று பார்க்கப்பட்டது. External link in
|publisher=
(உதவி)