உப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உப்பூர், (Uppoor) தமிழ்நாடு மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை வட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள உப்பூர் கிராமம், கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டிக்கும் - தேவிபட்டினத்திற்கும் இடையே அமைந்துள்ளது. [1] 1658.71 ஹெக்டேர் பரப்பு கொண்ட உப்பூர் கிராமம், உப்பூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.

வங்காள விரிகுடா கடற்கரை கிராமமான உப்பூரின் அஞ்சல் சுட்டு எண் 623525 ஆகும். இதனருகில் உள்ள அஞ்சலகம் இராஜசிங்கமங்களஹ்தில் உள்ளது. தொலைபேசி குறியீடு எண் 04567 ஆகும். இக்கிராமத்தினரின் முக்கியத் தொழில் கடல் மீன் பிடித்தல் ஆகும். உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயம், இக்கிராமத்தின் புகழ் பெற்ற கோயிலாகும். 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, உப்பூர் கிராமத்தின் மக்கள்தொகை 4,043 ஆகும். அருகமைந்த நகரங்கள் பரமக்குடி, இராமநாதபுரம் மற்றும் தேவக்கோட்டை ஆகும்.

உப்பூர் கிராமம், திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2][3]

உப்பூரின் வடக்கில் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், தெற்கில் நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம், மேற்கில் இளையாங்குடி ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.

கல்வி நிலையங்கள்[தொகு]

  • ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
  • அரசு உயர்நிலைப் பள்ளி

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. குகூள் வரைபடத்தில் உப்பூர் கிராமத்தின் அமைவிடம்
  2. Uppoor Village
  3. Uppoor Village
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பூர்&oldid=2513762" இருந்து மீள்விக்கப்பட்டது