பேச்சு:தொண்டி (பேரூராட்சி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//தொண்டியின் வரலாறு மிகவும் சிறப்பு வாய்ந்தது. பாண்டிய மன்னன் இறந்த பிறகு அரியணைகாக அவரது மகன்கள் குலசேகர பாண்டியனும் பராக்கிரம பாண்டியனும் போர் புரிந்தனர். அதில் பராக்கிரம பாண்டியன் கொல்லபட்டன். இதை கேள்விபட்ட் இலங்கை மன்னன் பராக்கிரம பாபு என்பவன் தன் பெயர் கொண்டவனை கொன்ற பாண்டியனை கொல்லுவதற்கு படை எடுத்து வந்தான். பாண்டிய நாட்டின் பல இடங்களை பிடித்து விட்டான். பாண்டியன் சோழர்களின் உதவியை நாடினான்.//

சோழர் 13ஆம் நூற்றாண்டிலேயே அழிக்கப்பட்டனர். பாண்டியனின் மகன்கள் உள்நாட்டுச் சண்டை நடந்தது 14ஆம் நூற்றாண்டில். அதனால் அப்போது பாண்டியன் சோழர் உதவியை நாடினான் என்பது வரலாற்றுப் பிழையாகும். மாற்ற வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:46, 26 மே 2012 (UTC)[பதிலளி]

  1. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் 1311 வரை ஆண்டான்.
  2. அவனது மகன்களுக்கான வாரிசுரிமை போர் அதன் பிறகே நடந்தது.
  3. அப்போது சோழர்கள் இல்லை.
  4. அதனால் சோழனின் உதவி நாடியதாக உள்ளதை நீக்கியுளேன்.
  5. இதை எழுதியவரிடம் (en:User:Ganeshk ) கேட்டதற்கு அவர் சரியானதை செய்யுங்கள் எனக் கூறிவிட்டார். அதனால் அத்தகவல் நீக்கப்பட்டது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:53, 31 மே 2012 (UTC)[பதிலளி]