சின்னமனூர்

ஆள்கூறுகள்: 9°50′N 77°23′E / 9.83°N 77.38°E / 9.83; 77.38
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னமனூர்
சின்னமனூர்
இருப்பிடம்: சின்னமனூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°50′N 77°23′E / 9.83°N 77.38°E / 9.83; 77.38
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
வட்டம் உத்தமபாளையம்

தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்

ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 42,305 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


375 மீட்டர்கள் (1,230 அடி)

குறியீடுகள்


சின்னமனூர் (Chinnamanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயிலின் முகப்பு

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 9°50′N 77°23′E / 9.83°N 77.38°E / 9.83; 77.38 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 375 மீட்டர் (1230 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு[தொகு]

[சங்க கால பெயர் அரிகேசநல்லூர் தெலுங்கு நாயக்கர்களின் வருகைக்கு பின்பு அரிகேசநல்லூர் சின்னமனூர் என்று பெயர் மாற்றப்பட்டது[இராணி மங்கம்மாள்|ராணிமங்கம்மாளின்]] பாதுகாப்பாளாராக இருந்த சின்னமநாயக்கர் என்பவரின் பெயரால் அமையப்பட்ட ஊர் . காலப்போக்கில் சின்னமநாயக்கனூர் சின்னமனூர் என்று மருவியது . இங்கு தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர் .[4]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,545 வீடுகளையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 42,305 ஆகும். அதில் 21,081 ஆண்களும், 21,224 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 83.5% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,007பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4015 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 894 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,224 மற்றும் 11 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.57%, இசுலாமியர்கள் 7.55%, கிறித்தவர்கள் 1.81% மற்றும் பிறர் 0.06% ஆகவுள்ளனர்.[5]

நகரின் சிறப்புகள்[தொகு]

சின்னமனூர் வாரச்சந்தை

செப்பேடு புகழ்பெற்ற சின்னமனூர் நகரானது தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் வாரச்சந்தை புகழ் பெற்றதாகும். இந்நகரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

  1. இந்நகரின் மேற்குப் புறமுள்ள செப்பேடு புகழ்பெற்ற அருள்மிகு சிவகாமியம்மன் திருக்கோயில் பல்வேறு சிறப்புகளை உடையது. கோவில் உருவான காலத்தில் இந்நகரைப் பற்றியும், கோவிலைப் பற்றியும் எழுதப்பட்ட செப்பேடுகள் இன்றும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலுக்குச் சொந்தமான பெரிய தோ் உள்ளது. வருடந்தோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் தோ்த்திருவிழா பிரசித்தி பெற்றது.


மாணிக்கவாசகர் இங்கு வந்து சென்றதிற்கான அடையாளமாகத் தனிக்கோவில் ஒன்று உள்ளது.

அருகில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள்[தொகு]

தேனி மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கும், மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கும் இங்கிருந்து எளிதில் செல்ல முடியும். அதற்கேற்ற வாகன வசதிகளும், பேருந்து வசதிகளும் எளிதாக கிடைக்கிறது. சின்னமனுாரில் வசதியான தங்கும் விடுதிகளும், ஓட்டல்களும் உள்ளது.

  1. சுருளி அருவி (நகரிலிருந்து சுமார் 35 கி.மீ)
  2. வீரபாண்டி மாரியம்மன் திருக்கோயில் (நகரிலிருந்து சுமார் 20 கி.மீ)
  3. ஹைவேவிஸ் எஸ்டேட் (நகரிலிருந்து சுமார் 40 கி.மீ)
  4. சோத்துப்பாறை அணை (நகரிலிருந்து சுமார் 45 கி.மீ)
  5. சின்ன சுருளி (நகரிலிருந்து சுமார் 45 கி.மீ)
  6. வைகை அணை (நகரிலிருந்து சுமார் 50 கி.மீ)
  7. தேக்கடி (கேரளா) (நகரிலிருந்து சுமார் 40 கி.மீ)
  8. மூணாறு (கேரளா) (நகரிலிருந்து சுமார் 100 கி.மீ)
  9. கொடைக்கானல் (நகரிலிருந்து சுமார் 70 கி.மீ)

கோயில்கள்[தொகு]

மேல்நிலைப் பள்ளிகள்[தொகு]

  1. நல்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  2. கணக்கு வேலாயி அமராவதி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  3. சிவகாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  4. காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  5. கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி
  6. மேயர் ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

|group7 = இணையதளம்

|list7 =

}}

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னமனூர்&oldid=3751299" இருந்து மீள்விக்கப்பட்டது