உள்ளடக்கத்துக்குச் செல்

மேலச்சொக்கநாதபுரம்

ஆள்கூறுகள்: 9°59′35″N 77°21′24″E / 9.9930°N 77.3568°E / 9.9930; 77.3568
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலச்சொக்கநாதபுரம்
மேலச்சொக்கநாதபுரம்
அமைவிடம்: மேலச்சொக்கநாதபுரம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°59′35″N 77°21′24″E / 9.9930°N 77.3568°E / 9.9930; 77.3568
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
வட்டம் போடிநாயக்கனூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 12,836 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் http://www.townpanchayat.in/mela-chokkanathapuram

மேலச்சொக்கநாதபுரம் (ஆங்கிலம்:Melachokkanathapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்தில், போடிநாயக்கனூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தமிழ்நாடு - கேரளா எல்கைக் கோட்டில் அமைந்துள்ள பேரூராட்சி ஆகும். பேரூராட்சியில் முக்கிய சுற்றுலா தளமாக போடி மெட்டு அமைந்துள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் முக்கிய நீர் ஆதாரமாக கூவலிங்கம் ஆறு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இப்பேரூராட்சி 12,836 மக்கள்தொகையும், 28 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 64 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியை, போடி நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என இப்பகுதி  மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-25. Retrieved 2019-03-11.
  5. மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியை போடி நகராட்சியுடன் இணைக்க வலியுறுத்தி தீர்மானம். தினமணி நாளிதழ். 20 செப்டம்பர் 2012. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலச்சொக்கநாதபுரம்&oldid=4281156" இலிருந்து மீள்விக்கப்பட்டது