மார்க்கையன்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்க்கையன்கோட்டை (ஆங்கிலம்:Markayankottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது தேனி - கம்பம் செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 7,024 மக்கள்தொகையும், 5.8 ச.கி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 48 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

பொருளாதாரம்[தொகு]

மாா்க்கையன்கோட்டை பேரூராட்சி முல்லைப் பொியாற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி பசுமையாக இருப்பதால், இங்கு விளைவிக்கப்படும் நெல், தென்னை மற்றும் வாழை போன்றவைகள் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது;

வரலாற்று சிறப்பு[தொகு]

இங்குள்ள தொட்டிய நாயக்கர்கள் இறந்த பிறகு நடும் நடுக்கல்லின் மூலம் பலநூறு ஆண்டு காலம் முந்தைய வரலாறுகளை ஆராய ஆய்வாளர்களுக்கு பெரிதும் உதவுகிறது . [2]

ஆதாரங்கள்[தொகு]

  1. மார்க்கையன்கோட்டை பேரூராட்சியின் இணையதளம்
  2. http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml


"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்கையன்கோட்டை&oldid=3683713" இலிருந்து மீள்விக்கப்பட்டது