கூடலூர் (தேனி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கூடலூர் (தேனி)
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் இ. ஆ. ப. [3]
நகர் மன்றத் தலைவர் ர. அருண்குமார்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

தேனி மாவட்டத்தில் இருக்கும் ஆறு நகராட்சிகளில் கூடலூர் நகராட்சி ஒரு இரண்டாம் நிலை நகராட்சியாகும்.

நகராட்சி நிலை[தொகு]

1901ஆம் ஆண்டில் கிராமப் பஞ்சாயத்தாகத் தொடங்கப்பட்ட இந்த ஊர், 1952 ஆம் ஆண்டில் பேரூராட்சி நிலைக்குத் தரம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு அரசின்ஆணை (G.O.NO.270 of RD & LA Department RD & LA dated 11.06.04) மூலம் கடந்த 10-07-2004 முதல் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நகராட்சி, தேனியிலிருந்து குமுளி (கேரளா) செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்(NH-220)தமிழகத்தின் மற்றும் கேரளா|கேரளாவின் எல்லைப் பகுதியில் உள்ள நகராட்சி இது. இந்நகராட்சியில் மேலக்கூடலூர், கீழக்கூடலூர், லோயர்கேம்ப் என்கிற மூன்றூ ஊர்கள் இணைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள்[தொகு]

  • என்.எஸ்.கே.பொன்னையாகவுண்டர் மேல்நிலைப்பள்ளி
  • ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலப்பள்ளி
  • திருவள்ளுவர் உயர்நிலைப்பள்ளி
  • வ.உ.சி.உயர்நிலைப்பள்ளி
  • கம்பம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி
  • இந்து நடுநிலைப்பள்ளி

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடலூர்_(தேனி)&oldid=1439596" இருந்து மீள்விக்கப்பட்டது