உள்ளடக்கத்துக்குச் செல்

குமுளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமுளி Kumily
കുമിളി
town
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்

குமுளி இந்தியாவின் கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள ஊராகும். இந்த ஊரிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற தேக்கடி வனவிலங்கு உய்வகம் அமைந்துள்ளது. மேலும் ஆனவிலாசம், சக்குப்பள்ளம், அனக்கர, புட்டடி, கொச்சற போன்றவை குமுளி அருகே உள்ள அழகிய சிற்றூர்களாகும்.அண்மையில் மங்களாதேவி கோவில் அமைந்துள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை 220 (கோட்டயம் - குமுளி:கே.கே சாலை எனப்படுவது) இதன் வழியே செல்கிறது. சுற்றுப்புறங்களிலிருந்து ஏலக்காய்,மிளகு போன்றவையின் வணிக மையமாகவும் திகழ்கிறது. தமிழகத்திலிருந்து சபரிமலை செல்வோர் பயணிக்கும் முக்கியப் பாதையில் இந்நகர் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் தேனி மாவட்டத்தின்கூடலூர் நகராட்சி உள்ளது.[1][2][3]

குமுளியிலிருந்து மேற்கே கோட்டயதிற்கும், கிழக்கே தேனி வழியாக மதுரைக்கும் செல்ல நல்ல சாலை வசதிகள் உள்ளன. காந்தளூர், மூணார் வழியாக உடுமலைப்பேட்டை செல்வதற்கு சரியான சாலை வசதிகள் இல்லை. மேலும், இவ்வழியில் காட்டு விலங்குகளும் ஏராளமாக உலவும்.

சங்ககாலத்தில்
சங்ககாலத்தில் குமுழி ஞாழலார் நப்பசலையார் என்னும் புலவர் இவ்வூரில் வாழ்ந்துவந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Kerala Official Language (Legislation) Act, 1969" (PDF).
  2. "Kumily - the plantation town". Department of Tourism, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
  3. "History, Kumily panchayat- details, Periyar, Thekkady, Idukki, Kerala - www.keralatourism.org › periyar". www.keralatourism.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுளி&oldid=3945464" இலிருந்து மீள்விக்கப்பட்டது