பூதிப்புரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூதிப்புரம் மரக்காமலை

பூதிப்புரம் (Boothipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் வட்டத்தில் உள்ளது. இது தேனியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பேரூராட்சியாகும்.

ஊர் அமைப்பு[தொகு]

இந்த ஊர் தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் அமைப்பில் இரண்டாம்நிலைப் பேரூராட்சி எனும் நிலையில் உள்ளது. சுமார் 11.65 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடைய இந்த ஊர் பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி மற்றும் ஆதிபட்டி போன்ற ஊர்களை உள்ளடக்கியது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 56 தெருக்கள் இருக்கின்றன.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9623 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பூதிபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூதிப்புரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

நீர் ஆதாரங்கள்[தொகு]

 1. கொட்டகுடி ஆறு
 2. வாழை ஆறு
 3. கல் ஆறு
 4. ராஜபூபால கண்மாய்

முக்கிய கோவில்கள்[தொகு]

 1. ஊர்காவலப்பன் கோவில்
 2. வரதராஜபெருமாள் கோவில்
 3. சன்னாசியப்பன் கோவில்
 4. ஆலமர முனீஸ்வரன் கோவில்
 5. காளியம்மன் கோவில்
 6. விநாயகர் கோவில்
 7. சுப்பிரமணிய சுவாமி கோவில்
 8. பேச்சியம்மன் கோவில்
 9. சக்தி விநாயகர் ஆலையம்
 10. பட்டாளம்மன் கோவில்

முக்கிய திருவிழாக்கள்[தொகு]

 1. சித்திரை திருவிழா (தமிழ் வருடபிறப்பு)
 2. ஊர்காவலப்பசுவாமி கோவில் திருவிழா
 3. வரதராஜபெருமாள்சுவாமி கோவில் திருவிழா
 4. காளியம்மன் கோவில் திருவிழா
 5. புரட்டாசி வார திருவிழா (ஆஞ்சநேயர் பவனி)
 6. ஆடி அம்மாவாசை மரக்காமலை சாஸ்தா கோவில் திருவிழா
 7. கெளமாரியம்மன் கோவில் திருவிழா

ஆதாரங்கள்[தொகு]

 1. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஜனவரி 30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |accessyear= ignored (உதவி); Invalid |dead-url=live (உதவி); Check date values in: |accessdate= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

|group7 = இணையதளம்

|list7 =

https://theni.nic.in

}}

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதிப்புரம்&oldid=3413620" இருந்து மீள்விக்கப்பட்டது