தூத்துக்குடி வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தூத்துக்குடி விமானநிலையம்

Tuticorin Airport.jpg
தூத்துக்குடி விமானநிலையம் நுழைவு வாயில்

IATA: TCRICAO: VOTK
தூத்துக்குடி விமானநிலையம் is located in தமிழ் நாடு
தூத்துக்குடி விமானநிலையம்
தூத்துக்குடி விமானநிலையம்
தூத்துக்குடி விமானநிலையம் (தமிழ் நாடு)
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொதுத்துறை
உரிமையாளர்/இயக்குனர் அரசுத்துறை (குடியியல்)
சேவை புரிவது * தூத்துக்குடி
அமைவிடம் விமானநிலையம் சாலை, வாகைகுளம், தூத்துக்குடி - 628103, தமிழ்நாடு
உயரம் AMSL 129 அடி / 39 மீ
ஆள்கூறுகள் 08°43′27″N 078°01′33″E / 8.72417°N 78.02583°E / 8.72417; 78.02583
இணையத்தளம் தூத்துக்குடி விமானநிலையம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
10/28 4,434 1,351 தார் சாலை

தூத்துக்குடி விமானநிலையம் (ஐஏடிஏ: TCRஐசிஏஓ: VOTK) தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி நகரிலிருந்து 16.9 km (10.5 mi) தொலைவில் வாகைகுளத்தில் அமைந்துள்ள உள்நாட்டு விமானநிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 26 டிசம்பர் 2014, அன்று தூத்துக்குடி வானூர்தி நிலையத்துக்கு 9001:2008 தரம் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கட்டமைப்பு[தொகு]

தூத்துக்குடி விமானநிலையத்தில் 10/28க்கு நெறிப்படுத்தும் 1351 மீட்டர்கள் நீளமும் 30 மீட்டர்கள் அகலமும் உடைய தாரிடப்பட்ட ஒரு ஓடுதளம் உள்ளது. 100 மீட்டர்களுக்கு 60 மீட்டர்கள் அளவுள்ள முகப்புத் தளத்தில் ஒரே நேரத்தில் ஏடிஆர் 72 இரகம் அல்லது அதை ஒத்த இரண்டு விமானங்கள் நிறுத்த வசதி உள்ளது. இதன் நிலைய வளாகத்தில் உச்சநிலையில் 72 பயணிகளை மேலாளுமாறு வசதிகள் உள்ளன. ஓட்டுதலுக்குத் துணைபுரிய துல்லிய அணுகை வழி சுட்டுகை (PAPI) விளக்குகளும் விமானநிலைய தொலை வழிகாட்டியும் நிறுவப்பட்டுள்ளன.[1]

விரிவாக்கமும் மேம்பாடும்[தொகு]

தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு கூட்டம், தமிழக பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பயணிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது, இரவு நேர விமான சேவை, தூத்துக்குடியில் இருந்து சென்னை தவிர பிற முக்கிய பகுதிகளுக்கும் விமான சேவையை இயக்குவது, சரக்கு போக்குவரத்து விமான சேவை, கூடுதலாக நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் கூறுகையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானங்கள் இயக்குவதற்காக விரிவாக்கப் பணிகள் முடிந்து விட்டன. விமான நிலையம் அருகேயுள்ள வல்லநாடு மலையில் எச்சரிக்கை விளக்கு அமைப்பதற்காக வனத்துறை ஒப்புதல் பெற்ற பின்னர் அந்த பணி முழுமையடையும்.

அதனை தொடர்ந்து இரவு நேர விமானங்கள் இயக்கப்படும். இந்த பணிகள் இன்னும் 4 மாதங்களில் முடியும். ரன்வேயை 3,115 மீட்டர் அளவிற்கு நீளப்படுத்தவும், புதிய விமான முனையம் அமைப்பதற்காகவும் ரூ.380 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்களை இயக்கி 600 பயணிகள் வரை புறப்பாடு செய்ய முடியும். இந்த பணிகள் முடிந்த பின் இங்கிருந்து கொச்சி, மும்பை, ஐதராபாத், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க வாய்ப்புள்ளது.

விமானச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்[தொகு]

விமானச் சேவைகள் சேரிடங்கள்
இன்டிகோ சென்னை, பெங்களூரு
ஸ்பைஸ் ஜெட் சென்னை

சான்றுகோள்கள்[தொகு]

  1. "Airport website". பார்த்த நாள் 26 October 2011.

வெளி இணைப்புகள்[தொகு]