கண்டதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை வட்டத்திலுள்ள ஒரு ஊர் கண்டதேவி ஆகும். இங்கு உள்ள கண்டதேவி ஸ்வர்ணமூர்த்தி ஈஸ்வரர் கோயில் தேர்ப் பிரச்சனையால் இவ்வூர் தமிழக அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. காலங்காலமாக இவ்வூரில் உள்ள பட்டியலின மக்களான பள்ளர் மற்றும் பறையர் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு இக்கோயில் தேரை வடம் பிடித்து இழுக்கும் உரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து தங்களது மனித உரிமைகளை நிலைநாட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அமைப்புகள் 1998-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தை அணுகி அரசியல் சட்ட உரிமையை அனுபவிக்க ஆணை பெற்றன. தாழ்த்தப்பட்டவர்கள் தேரிழுக்கும் உரிமையைச் சட்டரீதியாக பெற்றதைப் பொறுக்காத சாதி வெறியர்கள் தேர் இழுப்பதையே நிறுத்தி விட்டனர். 1998-முதல் இன்று (2007) வரையிலும் இத்தேர் இழுக்கும் போராட்டம் இன்னமும் முடிவின்றி தொடர்ந்து வருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டதேவி&oldid=2583308" இருந்து மீள்விக்கப்பட்டது