உள்ளடக்கத்துக்குச் செல்

ஆளூர் ஷா நவாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆளூர் ஷா நவாஸ்
துணைப் பொதுச் செயலாளர், விசிக
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 ஏப்ரல் 1982 (1982-04-22) (அகவை 42)
ஆளூர், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி
துணைவர்பர்வீன்
பிள்ளைகள்முகம்மது ரைஹான், அஸ்ரா பாத்திமா
பெற்றோர்ஜெய்னுல் ஆபிதீன் - ராபியத் பீவி
வாழிடம்சென்னை
வேலைஅரசியல்வாதி

ஆளூர் ஷா நவாஸ் (இயற்பெயர்: ஜெ.முகம்மது ஷா நவாஸ்) (ஏப்ரல் 22, 1982) தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் கிராமத்தில் பிறந்தவர். இளம் அரசியல்வாதியும், ஊடகவியலாளரும், எழுத்தாளரும்,  பேச்சாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி) உறுப்பினரும் ஆவார்.[1]

வரலாறு

[தொகு]

இவர் 1982ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி, தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆளூர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் தந்தை ஜெய்னுல் ஆபிதீன், தாயார் - ராபியத் பீவி ஆவர். இவருக்குத் தங்கை ஒருவரும் இருக்கிறார்.[2] இவர் துணைவியார் பர்வீன், மற்றும் மகன் முஹம்மது ரைஹான், மகள் அஸ்ரா ஆவர். கலை, இலக்கிய ஈடுபாடு கொண்டவர். அம்பேத்கர், பெரியார் கொள்கையில் பிடிப்பு கொண்டவர்.[3] ஆதிக்க எதிர்ப்பு, சுரண்டல் எதிர்ப்பு, ஒடுக்குமுறை எதிர்ப்பு, சமத்துவம், சமூக நீதி பாதுகாப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டவர்.[4]

பள்ளிப் படிப்பை ஆளூர் மற்றும் தக்கலையில் பயின்றார். இதழியலில் பட்டயப் படிப்பு முடித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆவார். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வருகிறார். ஆவணப்பட இயக்குநரும், ஊடகவியலாளரும், எழுத்தாளரும்,  பேச்சாளரும் ஆவார். 'குருதியில் நனையும் காலம்' எனும் நூலையும் எழுதியுள்ளார். குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு 16, மே 2016 அன்று நடைபெற்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, 19, 853 வாக்குகள் பெற்றார். 2021 சட்டமன்றத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு 66,281 வாக்குகள் பெற்று, 7238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மதிப்பீட்டுக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராகவும் செயலாற்றி வருகிறார்.

திருமணமும், குடும்பமும்

[தொகு]

இவர் பர்வீன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முகம்மது ரைஹான் என்னும் மகன், அஸ்ரா என்னும் மகள் உள்ளனர். 1999ம் ஆண்டு சென்னைக்கு வந்த இவர்,[5] குடும்பத்துடன் சென்னை எழும்பூரில் வசித்து வருகிறார்.[6]

விருதுகள்

[தொகு]
  • 2006-இல் நிழல் திரைப்பட இயக்கம் வழங்கிய சிறந்த ஆவணப்பட இயக்குநருக்கான விருது.
  • 2017-இல் கனடாவில் கனடா தமிழ்ச் சங்கம் நடத்திய தமிழர் மரபு மாநாட்டில் வழங்கப்பட்ட 'தமிழ் மரபுக் காவலர்' பட்டம்.
  • 2018-இல் அமெரிக்காவில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் வழங்கிய 'சமூகநீதிக்கான செயல்' விருது.
  • 2019 -இல் தென் கொரியாவில், தமிழ் கலை இலக்கிய விழாவில், கொரிய தமிழ்ச் சங்கம் வழங்கிய 'சமூகப் பண்பாளர்' விருது.
  • பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு வழங்கிய சிறந்த அரசியல் பணிக்கான 'அம்பேத்கர் பேரொளி' விருது.
  • தஞ்சை அஞ்சுமன் அறிவகம் வழங்கிய 'ஊடகச் செம்மல்' விருது.
  • குவைத் தாய்மண் அமைப்பு வழங்கிய 'இளம்பிறை' விருது.
  • குவைத் தந்தை பெரியார் நூலகம் வழங்கிய 'சமூகநீதிப் போராளி' விருது.
  • சென்னை பிலாலியா அரபிக் கல்லூரி வழங்கிய 'இளம் எழுத்தாளர்' விருது.
  • தமிழக அரசியலுக்குப் பொலிவு தரும் புதிய முகம்" என்று "தி இந்து" ஆங்கில நாளிதழ் இவரைப் பற்றி கட்டுரை தீட்டி புகழாரம் சூட்டியது[7].
  • "கலாமின் பாதையில் களத்தில் நூறு இளைஞர்கள்" என்று ஆனந்த விகடன் தேர்வு செய்த 100 பேரில் இவரும் ஒருவர்.
  • அமெரிக்க அரசின் கல்வி மற்றும் கலாச்சாரப் பிரிவின் சார்பில், சர்வதேச இளம் தலைவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு 2014-இல் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டவர்.
  • டொரோண்டோ மாநகர சபை (Toronto City Council) உள்ளிட்ட, கனடா நாட்டின் அரச அவைகளால் சிறப்பிக்கப்பட்டவர்.

செயற்பாடுகள்

[தொகு]
  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும், 'தமிழ்ப் பேரவை' எனும் பன்னாட்டு தமிழ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றி வருகிறார்.
  • அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தர், ஓமன், சவூதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து உரையாற்றி உள்ளார்.
  • தமிழ்த் தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
  • 2016 தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் வி.சி.க சார்பில் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க, அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகளின் துணையின்றி 20,000 வாக்குகளைப் பெற்றார். தேர்தல் வரவு செலவு கணக்கை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். "தமிழக அரசியலில் இப்படியும் ஓர் அதிசயம்" என்று இவரைப் பற்றி ஆனந்த விகடன் வியந்து எழுதியது.
  • 2021 சட்டமன்றத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு 66,281 வாக்குகள் பெற்று, 7238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  • தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மதிப்பீட்டுக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராகவும் செயலாற்றி வருகிறார்.
  • தமிழ்நாடு சட்டமன்றத்தில் இவர் எழுப்பிய பல கோரிக்கைகள் அரசின் திட்டங்களாக செயல்வடிவம் பெற்றுள்ளன. குறிப்பாக அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று இவர் பேசினார். அத்திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

அதுபோல், பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கக் கூடாது; மாநில அரசுக்கு தான் இருக்க வேண்டும் என்று பேசினார். அதன்படி தமிழ்நாடு அரசால் மசோதா கொண்டுவரப்பட்டது.

மேலும், நாகப்பட்டினம் தொகுதி சார்ந்து பல்வறு கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எழுப்பி, அதன்மூலம் நிறைய திட்டங்களை நாகைக்கு கொண்டு வந்துள்ளார். [8].

  • ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 'குருதியில் நனையும் காலம்' எனும் நூலை 'உயிர்மை' பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
  • .காயிதே மில்லத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக எடுத்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "குன்னம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்".
  2. "ஆளூர் ஷாநவாஸ் குடும்பம்".
  3. "ஈடுபாடு".
  4. "நான் பேசுவது Trend ஆவது ஏன்?".
  5. "சென்னைக்கு வந்தது எப்போது".
  6. "J Mohamed Shanavas".
  7. http://www.thehindu.com/news/national/tamil-nadu/new-faces-give-tn-politics-a-makeover/article7817748.ece
  8. https://www.vikatan.com/news/tamilnadu/65326-candidate-release-his-election-expense-in-facebook.html

பிற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளூர்_ஷா_நவாஸ்&oldid=4127859" இலிருந்து மீள்விக்கப்பட்டது