குவாலியர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குவாலியர் கோட்டை

குவாலியர் கோட்டை குவாலியர் மகாராஜா சிந்தியாவின் தலைநகராய் விளங்கிய மலைக் கோட்டை ஆகும்.

பெயர்க் காரணம்[தொகு]

சுராஜ் சென் என்னும் சிந்தியா மன்னனின் படைத் தளபதி ஒருவன் கடுமையான நோயால் பீடிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த போது குவாலிப்பா எனும் துறவி அவன் நோயைத் தீர்த்த காரணத்தால் அவனின் நினைவாக அவ்வூருக்கு அவரது பெயரை வைத்தான்.

கோட்டையின் அமைப்பு[தொகு]

குவாலியர் கோட்டைச் சுவர்களில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்

இக்கோட்டையில் ஐந்து நுழைவாயில்கள் உள்ளன. இங்குள்ள தர்பார் மண்டபம் உலகிலேயே சிறந்த மண்டபங்களுள் ஒன்று.இக்கோட்டையின் உள்ளே தெளிகோவில் ஒன்று உள்ளது. இது எட்டாம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டது. இக்கோயிலைச் சுற்றிலும் மரக் கதவுகள் ஏராளமாக உள்ளன. அவை பல கோணங்களில் செதுக்கப் பட்டுள்ளன. ஓரிரு இடங்களில் சமண சமய தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன. சுவர்களில்சுருள் சுருளாக இலை வடிவத்தில் சிற்பங்கள் காணப்படுகின்றன.[1][2]

நீர் நிலைகள்[தொகு]

கோட்டையினுள் ஏராளமான நீர் நிலைகள் உள்ளன. வடக்கிலிருந்து தெற்காக ஜாவுகார்தால், மானசரோவர், சுரஜ் குந்து, குங்கோலா, ஏக்கப்பா,கடோரா, தோபி, ராணி, சேடி என பல நீர்நிலைகள் உள்ளன.தெளி கோவிலுக்குப் பின்பக்கமாக கடோரா ஏரி எனப்படும் வட்ட வடிவமான ஏரி காணப்படுகிறது.

கோட்டையின் சிறப்பு[தொகு]

அக்பரின் அரசவை இசைக்கலைஞ்ர் தான்சேன் என்பவர் சமாதியை இக்கோட்டையில் காணலாம். கோட்டையினுள் பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன.ராஜா மான்சிங் தன் மனைவியின் நினைவாகக் கட்டிய குஜரி மகால் தற்போது அருங்காட்சியகமாகவும், புதைபொருள் ஆராய்ச்சிக்கூடமாகவும் திகழ்கிறது. சீக்கியர்களின் ஆறாவது குருவான ஹர்கோவிந்த் சிங் என்பவர் இக்கோட்டையில் ஜஹாங்கீர் காலத்தில் ரிறை வைக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gwalior Fort
  2. வட இந்தியக் கோட்டைகள்.102 , பக்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாலியர்_கோட்டை&oldid=2782495" இருந்து மீள்விக்கப்பட்டது