மிகிரகுலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகிரகுலன்
வெள்ளை ஹூணர்களின் பேரரசர்
மிகிரகுலனின் நாணயம்
ஆட்சி502 - 530
முன்னிருந்தவர்தோரமணன்
தந்தைதோரமணன்
இறப்பு530
சமயம்இந்து

மிகிரகுலன் (Mihirakula) நடு ஆசியாவின் ஹெப்தலைட்டுகள் எனப்படும் வெள்ளை ஹூணர்களின் முக்கிய பேரரசன் ஆவான். இவரது பேரரசு தற்கால ஆப்கானித்தான், பாக்கித்தான் மற்றும் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளைக் கொண்டிருந்தது.

நடு ஆசியாவிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்தில் குடியேறிய ஹூணர்கள், இந்து தர்மங்களைப் பயின்று இந்துக்களாக மாறினர். பிற்கால குப்தப் பேரரசின் காலத்தில் ஹெப்தலைட்டுகளின் ஒரு பிரிவினரான வெள்ளை ஹூணர்களின் தலைவர் மிகிரகுலன், இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளை 502 முதல் 530 முடிய ஆண்டார்.[1]

பெயர்க்காரணம்[தொகு]

மிகிரகுலன் என்ற சமசுகிருதச் சொல்லிற்கு சூரியனை வழிபடும் சூரிய குலத்தினன் என்று பொருள்

வரலாறு[தொகு]

கி பி ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு பரத கண்டப் பகுதிகளில் மிகிரகுலன் தலைமையில் ஹெப்தலைட்டுகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். கி பி ஏழாம் நூற்றாண்டின் சீன பயணியும், பௌத்த அறிஞருமான யுவான் சுவான் தனது குறிப்புகளில், மிகிரகுலன் இயற்கையில் வீரம் பொருந்தியவனும், திறமைமிக்கவனும் ஆவான் என தனது இந்தியாவின் மேற்கு பிராந்தியத்தின் ஆவணம் எனும் பதிவில் குறித்துள்ளார்.[2] குவாலியர் கல்வெட்டுக் குறிப்புகளில், மிகிரகுலன் தனது இராச்சியத்தின் பரப்பை மத்திய இந்தியாவின் குவாலியர்வரை நீட்டித்தான் எனக் கூறுகிறது.

மால்வாவின் சந்தேல ஔலிக குல இராசபுத்திர மன்னர் யசோதர்மன், மிகிரகுலனை போரில் தோற்கடித்தார் என்பதை மண்டோசோர் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகிறது.[3]

யுவான் சுவாங்கின் கூற்றுப் படி, கி பி 528 பிற்கால குப்தப் பேரரசர் நரசிம்மகுப்தர், மிகிரகுலனை போரில் சிறை எடுத்து பின்னர் விடுவித்ததாக கூறுகிறார். மிகிரகுலன் சிறையில் இருக்கும் போது, மிகிரகுலனின் சகோதரன் ஹூணர்களின் தலைமைப் பதவி ஏற்றான்.

பின்னர் மிகிரகுலன் சிறுபடைகளைத் திரட்டி காஷ்மீரைக் கைப்பற்றி பின்னர் கந்தகாரையும் கைப்பற்றினார்.[2]

பௌத்த சாத்திரங்கள் மிகிரகுலனை பௌத்தத்தின் பகைவன் எனக் குறிப்பிடுகிறது.[1]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Grousset, Rene (1970), The Empire of the Steppes, Rutgers University Press, p. 71, ISBN 0-8135-1304-9
  2. 2.0 2.1 Ahmad Hasan Dani (1999). History of Civilizations of Central Asia: The crossroads of civilizations, A.D. 250 to 750. Motilal Banarsidass Publ. பக். 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120815408. http://books.google.com.pk/books?id=FcKtIPVQ6REC. பார்த்த நாள்: November 5, 2012. 
  3. Ojha, N.K. (2001). The Aulikaras of Central India: History and Inscriptions, Chandigarh: Arun Publishing House, ISBN 81-85212-78-3, p.52

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகிரகுலன்&oldid=3792578" இலிருந்து மீள்விக்கப்பட்டது