உள்ளடக்கத்துக்குச் செல்

தோரமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரமணன்
ஹெப்பதலைட்டுகளின் பேரரசன்
பின்னையவர்மிகிரகுலன்
குழந்தைகளின்
பெயர்கள்
மிகிரகுலன்

தோரமணன் (Toramana) ஹெப்தலைட்டுகளின் ஒரு பிரிவினரான வெள்ளை ஹூணர்களின் பேரரசர் ஆவார். இவர் பண்டைய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளை ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஆண்டவர்.[1] ஹூணர்களின் படைபலத்தை ஒன்றுசேர்த்து பஞ்சாப், ஆப்கானித்தான், கந்தகார், மேற்கு இந்தியாப் பகுதிகளைக் கைப்பற்றினார். சஞ்செலி கல்வெட்டுக் குறிப்புகள் தோரமணனின் மால்வா மற்றும் குஜராத் வெற்றிகளைக் கூறுகிறது. தோரமணனின் ஆட்சிப் பகுதியில் தற்கால உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் காஷ்மீரின் பகுதிகளும் இருந்தன.[2]

கி பி 510-இல் குப்தப் பேரரசர் பானுகுப்தர் தோரமணனை போரில் வென்றார்.[3][4] இவரின் மகன் மிகிரகுலனும் [5] குப்தப் பேரரசர் நரசிம்ம குப்தர் மற்றும் மால்வா மன்னர் யசோதர்மனால் தோற்கடிப்பட்டார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Grousset, Rene (1970). The Empire of the Steppes. Rutgers University Press. pp. 70-71. ISBN 0-8135-1304-9.
  2. Dani, Ahmad Hasan (1999). History of Civilizations of Central Asia: The crossroads of civilizations, A.D. 250 to 750. Motilal Banarsidass Publ. p. 142. ISBN 8120815408. Retrieved November 5, 2012.
  3. Encyclopaedia of Indian Events & Dates by S. B. Bhattacherje A15
  4. The Classical Age by R.K. Pruthi p.262
  5. "Gwalior Stone Inscription of Mihirakula" (PDF). Project South Asia. Archived from the original (PDF) on 2011-08-12. Retrieved 2009-04-05.
முன்னர்
முதலாம் கிங்கிலன்
ஹெப்தலைட்டு ஆட்சியாளர்கள் பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரமணன்&oldid=4452934" இலிருந்து மீள்விக்கப்பட்டது