மஞ்சுளா விஜயகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சுளா விஜயகுமார்
பிறப்பு(1953-09-09)9 செப்டம்பர் 1953
இறப்பு23 சூலை 2013(2013-07-23) (அகவை 59)
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1969-2013
வாழ்க்கைத்
துணை
விஜயகுமார்
பிள்ளைகள்சிறீதேவி, அருண் விஜய், வனிதா, பிரீத்தா, அனித்தா, கவிதா

மஞ்சுளா விஜயகுமார் (9 செப்டம்பர் 1953 - 23 சூலை 2013) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயகுமாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வனிதா, பிரீத்தா, சிறீதேவி என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.[1]

நடிப்பு[தொகு]

மஞ்சுளா முதன் முதலில் 1969 ஆம் ஆண்டில் சாந்தி நிலையம் திரைப்படத்தில் ஒரு துணை நடிகையாக நடித்தார். 1971 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து ரிக்சாக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 1970களில் தமிழ் திரையில் அன்றைய முன்னணி நடிகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகுமார் எனப் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1980களின் இறுதியில் இருந்து துணை நடிகையாகப் பல படங்களில் நடித்தார்.[2][3] 2013 சூலை 23 இல் இவர் தனது வீட்டில் கட்டிலில் இருந்து கீழே வீழ்ந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்.[4]

இவர் எம்.ஜி.ஆர் உடன் ரிக்சாக்காரன் (1971), இதய வீணை (1972), உலகம் சுற்றும் வாலிபன் (1973), நேற்று இன்று நாளை (1974), நினைத்ததை முடிப்பவன் (1975) என மொத்தம் ஐந்து படங்களில் இணைந்து நடித்துள்ளாா்.

சிவாஜி கணேசன் உடன் எங்கள் தங்க ராஜா (1973), என் மகன் (1974), அவன்தான் மனிதன் (1975), மன்னவன் வந்தானடி (1975), அன்பே ஆருயிரே (1975), டாக்டர் சிவா (1975), சத்யம் (1976), உத்தமன் (1976), அவன் ஒரு சரித்திரம் (1977), நெஞ்சங்கள் (1982) என பத்து படங்களில் இணைந்து நடித்துள்ளாா்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சுளா_விஜயகுமார்&oldid=3765195" இருந்து மீள்விக்கப்பட்டது