விஜயகுமார்
விஜயகுமார் | |
|---|---|
| பிறப்பு | பஞ்சாக்சரம் ரங்கசாமி பிள்ளை ஆகத்து 29, 1943 நாட்டுச்சாலை, பட்டுக்கோட்டை, தமிழ்நாடு[1] |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1961, 1973 – தற்போது வரை |
| பெற்றோர் | ரங்கசாமி பிள்ளை சின்னம்மாள்[2] |
| வாழ்க்கைத் துணை |
|
| பிள்ளைகள் | அருண் விஜய் பிரீத்தா ஸ்ரீதேவி விஜயகுமார் கவிதா வனிதா அனிதா |
விஜயகுமார் (Vijayakumar, பிறப்பு: 29 ஆகத்து 1943) என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு (குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில்) நடித்துள்ளார். ஒரு சில இந்தி, தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 1961இல் வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக அறிமுகமான இவர், 400இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[3]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தார். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, திரைப்பட நடிகையான மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாருக்கு அருண் விஜய் என்ற மகனும், கவிதா, அனிதா, வனிதா, பிரீத்தா, சிறீதேவி என ஐந்து மகள்களும் உள்ளனர்.
சின்னத்திரையிலும் நடிக்கத் தொடங்கியுள்ள இவர் 'தங்கம்' என்ற தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு தந்தையாக நடித்துள்ளார்.
இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவராக பதவி வகித்திருந்தார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]1961 ஆம் ஆண்டில் ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில் குழந்தை நடிகராக இவரது பயணம் தொடங்கியது . சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோர் நடித்த இப்படத்தில் சிறுவயது முருகனாக விஜயகுமார் நடித்தார். அதன் பின் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லையென்றாலும், இவர் கந்தன் கருணை திரைப்படத்தில் முருகக் கடவுளாக நடிக்கவிருந்தார். ஆனால் அதற்குப் பதிலாக சிவகுமார் அந்த வேடத்தில் நடித்தார். சூரபத்மனால் கைது செய்யப்பட்ட பிரபுகளில் ஒருவராக விஜயகுமார் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.
1973 ஆம் ஆண்டில், தேவராஜ்-மோகன் இயக்கிய பொண்ணுக்குக் தங்க மனசுவில் விஜயகுமார் தனது முதல் வெற்றியைப் பெற்றார். இப்படத்தின் மற்றொரு நாயகன் சிவகுமார். பொண்ணுக்கு தங்க மனசு திரைப்படத்தின் வெற்றி இவருக்கு தமிழ்த் திரைப்படங்களில் நிரந்தர இடத்தைப் பெற்றுத் தந்தது. முன்னணி நடிகர்களுடன் எழுபதுகளில் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். குறிப்பாக எம்.ஜி.ராமச்சந்திரன் உடன் இன்று போல் என்றும் வாழ்க,சிவாஜி கணேசன் உடன் தீபம், கமல்ஹாசன் உடன் நீயா போன்ற திரைப்படங்களில் நடித்தார். 1970களில் விஜயகுமார் ஒரு பிரபலமான துணை நடிகராக இருந்தபோது, அவள் ஒரு தொடர்கதை, மதுர கீதம், அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களில் இவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.
1980களின் முற்பகுதியில் ஒரு சிறிய சரிவைச் சந்தித்த பிறகு, விஜயகுமார் இரண்டாவது 1988 ஆம் ஆண்டில் நடிக்கத் தொடங்கினார். மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில், பிரபு, கார்த்திக் இருவருக்கும் தந்தையாக நடித்தார். 1990களில், இவர் நடித்த நாட்டாமை, கிழக்குச் சீமையிலே, பாட்ஷா ஆகிய திரைப்படங்கள் இவர் திரைப்பயணத்தில் முக்கியமானவை. கடந்த சில ஆண்டுகளில், திரைப்படங்களை விட தொலைக்காட்சித் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஜயகுமார் இதுவரை மொத்தமாக 400இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]அவர் 2015 அக்டோபர் 18 வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினராகவும் இருந்தார்.
2016 மார்ச் 16 அன்று, விஜயகுமார் பாஜகவில் இணைந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]விஜயகுமாரின் மனைவிகள் முத்துகண்ணு, மஞ்சுளா.
முத்துக்கண்ணுவின் வழியே வந்த பிள்ளைகள் கவிதா, அனிதா, அருண் விஜய் ஆகியோராவர்.
மஞ்சுளாவின் வழியே வந்த பிள்ளைகள் வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோராவர்.
இதுவரை, அருண் விஜயும் அவரது தந்தையான விஜயகுமாரும் நான்கு முறை மட்டுமே திரையில் ஒன்றாக நடித்துள்ளனர். அவை, பாண்டவர் பூமி, மலை மலை , மாஞ்சா வேலு, குற்றம் 23.
2013 சூலை 23 அன்று, விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளா சென்னையில் இறந்தார். அவருக்கு வயது 59.
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
[தொகு]- அக்னி நட்சத்திரம்
- கிழக்குச் சீமையிலே
- குசேலன்
- சேரன் பாண்டியன்
- நாட்டாமை
- முதல்வன்
- மஜா
- சந்திரமுகி
- சாமி
- சிங்கம்
- அந்தி மந்தாரை
- பொண்ணுக்கு தங்க மனசு
- அவள் ஒரு தொடர்கதை
- அழகே உன்னை ஆராதிக்கிறேன்
- பெரிய இடத்து மாப்பிள்ளை
நடித்த திரைப்படங்கள்
[தொகு]2010 களில்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2014 | சண்டமாருதம் | ||
| ஆம்பள | |||
| லிங்கா | |||
| 2013 | சிங்கம் 2 | தமிழக அமைச்சர் | |
| சென்னையில் ஒரு நாள் | மருத்துவர். அருமைநாயகம் | ||
| 2011 | மம்பட்டியான் | ||
| ஒஸ்தி | |||
| கண்டேன் | |||
| பொன்னர் சங்கர் | பெரியமலை கவுண்டர் | ||
| 2010 | சிங்கம் | தமிழக உள்துறை அமைச்சர் | |
| மாஞ்சா வேலு | வேலுவின் அப்பா | ||
| கோவா | நாட்டாமை | ||
| ஜக்குபாய் |
2000 களில்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2009 | பொக்கிஷம் | சிறப்புத் தோற்றம் | |
| சொல்ல சொல்ல இனிக்கும் | |||
| மலை மலை | காவல் ஆய்வாளர் | ||
| 1977 | |||
| 2008 | குசேலன் | அவராகவே | சிறப்புத் தோற்றம் |
| கண்ணும் கண்ணும் | |||
| வைத்தீஸ்வரன் | |||
| ஆயுதம் செய்வோம் | உதயமூர்த்தி | ||
| 'சந்தோஷ் சுப்பிரமணியம் | ராஜேஸ்வரியின் அப்பா | ||
| 2007 | தாமிரபரணி | பானுவின் தாத்தா | |
| குற்றப்பத்திரிகை | |||
| தீபாவளி | முதலியார் | ||
| 2006 | குஸ்தி | அபி, திவ்யாவின் தாத்தா | |
| தலைமகன் | |||
| இளவட்டம் | |||
| ஜாம்பவான் | |||
| தர்மபுரி | |||
| ஆதி | ஆதியின் தாத்தா | ||
| 2005 | குருதேவா | ||
| ராமகிருஷ்ணா | |||
| ஜி | |||
| மஜா | சிதம்பரம் | ||
| லண்டன் | |||
| சந்திரமுகி | துர்காவின் தாத்தா | ||
| 2004 | ஏய் | ||
| வானம் வசப்படும் | |||
| மானஸ்தன் | |||
| குத்து | |||
| 2003 | சாமி | சாமியின் அப்பா | |
| அன்பு | |||
| 2002 | பாபா | ||
| ஆல்பம் | |||
| ஸ்ரீ | |||
| ஆசை ஆசையாய் | |||
| துள்ளுவதோ இளமை | |||
| என் மன வானில் | |||
| வில்லன் | |||
| 2001 | பாண்டவர் பூமி | ||
| ஆனந்தம் | |||
| ஸ்டார் | |||
| ஏழுமலை | |||
| 2000 | குஷி | ||
| சந்தித்த வேளை | |||
| மாயி |
1990 களில்
[தொகு]1980 களில்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1989 | ராஜாதி ராஜா | ||
| வெற்றி விழா | |||
| 1988 | அக்னி நட்சத்திரம் | விஸ்வநாத் | |
| மதுரைக்கார தம்பி | |||
| புதிய வானம் | |||
| என் தமிழ் என் மக்கள் | |||
| 1987 | இன்சாப் கி புகார் | ||
| விடுதலை | |||
| வேலுண்டு வினையில்லை | |||
| வைராக்கியம் | |||
| 1986 | மாவீரன் | ||
| மௌனம் கலைகிறது | |||
| ஒரு இனிய உதயம் | |||
| நான் அடிமை இல்லை | |||
| உயிரே உனக்காக | |||
| 1985 | ராஜரிஷி | ||
| நேர்மை | |||
| 1984 | சுமங்கலி கோலம் | ||
| 1983 | யாமிருக்க பயமேன் | ||
| நீதிபதி | |||
| சட்டம் | |||
| தாய் வீடு | |||
| சந்திப்பு | |||
| துடிக்கும் கரங்கள் | |||
| ஜீத் ஹமாரி | |||
| 1982 | தியாகி | ||
| ஊரும் உறவும் | |||
| நாயக்கரின் மகள் | |||
| தீர்ப்பு | |||
| நெஞ்சங்கள் | |||
| 1981 | சத்யம் சுந்தரம் | ||
| 1980 | காளி |
1970 களில்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1979 | அழகே உன்னை ஆராதிக்கிறேன் | ||
| குப்பத்து ராஜா | |||
| வீட்டுக்கு வீடு வாசப்படி | |||
| பகலில் ஒரு இரவு | |||
| நீயா | |||
| கவரி மான் | |||
| அடுக்கு மல்லி | |||
| 1978 | சங்கர் சலீம் சியாமன் | ||
| ஆயிரம் ஜென்மங்கள் | |||
| அல்லிதர்பார் | |||
| அவளொரு பச்சைக் குழந்தை | |||
| மீனாட்சி குங்குமம் | |||
| பைலட் பிரேம்நாத் | சிவாஜி கணேசனின் மகன் | ||
| சொன்னது நீ தானா | |||
| வட்டத்துக்குள் சதுரம் | |||
| வருவான் வடிவேலன் | |||
| ருத்ர தாண்டவம் | |||
| இறைவன் கொடுத்த வரம் | |||
| வணக்கத்துக்குரிய காதலியே | |||
| என் கேள்விக்கு என்ன பதில் | |||
| மாங்குடி மைனர் | |||
| 1977 | ஆறு புஷ்பங்கள் | ||
| ரகுபதி ராகவ ராஜாராம் | |||
| இன்று போல் என்றும் வாழ்க | |||
| இளைய தலைமுறை | |||
| 1976 | துணிவே துணை | ஜெய்சங்கரின் சகோதரர் | |
| ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது | |||
| 1974 | அவள் ஒரு தொடர்கதை | ||
| 1973 | பொண்ணுக்கு தங்க மனசு | மறு அறிமுகம்
மாவட்ட ஆட்சியர் வேடம்||(திஞா) |
1960 களில்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1961 | ஸ்ரீவள்ளி |
தொலைக்காட்சித் தொடர்கள்
[தொகு]| ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | தொலைக்காட்சி | மொழி |
|---|---|---|---|---|
| 2009-2013 | தங்கம் | ராஜராமச்சந்திர ரகுநாத் ஏலியஸ் ஐயா | சன் தொலைக்காட்சி | தமிழ் |
| 2013–2014 | வம்சம் | வெற்றிவேல் அண்ணாச்சி | சன் தொலைக்காட்சி | தமிழ் |
| 2016-2017 | தலம்பிராலு (తలంబ్రాలు) | சங்த்யாவின் தாத்தா | ஜெமினி தொலைக்காட்சி | தெலுங்கு |
| 2017-தற்போது | நந்தினி | ராஜசேகர் | சன் தொலைக்காட்சி | தமிழ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-17. Retrieved 2014-12-19.
- ↑ http://cinema.maalaimalar.com/2013/05/21230519/vijaya-kumar-act-above-400-fil.html
- ↑ "நடிகர் விஜயகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்க வைத்த கலைஞர்". 28 ஆகஸ்ட் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/572328-vijayakumar-birthday-special.html.