எங்கள் தங்க ராஜா
| எங்கள் தங்க ராஜா | |
|---|---|
![]() | |
| இயக்கம் | வி. பி. ராஜேந்திர பிரசாத் |
| தயாரிப்பு | கஜபதி ஆர்ட் பிக்சர்ஸ் வி.பி. ராஜேந்திர பிரசாத் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் மஞ்சுளா சௌகார் ஜானகி சி.ஐ.டி. சகுந்தலா |
| விநியோகம் | சிவாஜி புரொடக்சன்சு |
| வெளியீடு | சூலை 14, 1973 |
| நீளம் | 3968 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
எங்கள் தங்க ராஜா (Engal Thanga Raja) என்பது 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை வி. பி. ராஜேந்திர பிரசாத் தயாரித்து இயக்கினார்.[1] இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா, சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்தனர்.[2] இது 1972 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான மானவுடு தானவுடுவின் மறுஆக்கம் ஆகும்,[3] மேலும் இது 1886 ஆம் ஆண்டு ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் எழுதிய ஸ்ட்ரேஞ்ச் கேஸ் ஆஃப் டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட் என்ற புதினத்தை ஓரளவு தழுவி எடுக்கப்பட்டது.[4]
நடிப்பு
[தொகு]- ராஜா (எ) டாக்டர் தங்கராஜா /பட்டாகத்தி பைரவன் என இருவேடங்களில் சிவாஜி கணேசன்
- வசந்தியாக மஞ்சுளா
- சீதாவாக சௌகார் ஜானகி
- காதர் பாய்/தாத்தாவாக மேஜர் சுந்தரராஜன்
- வேதாச்சலமாக இரா. சு. மனோகர்
- தர்மலிங்கமாக எஸ். வி. இராமதாஸ்
- கோபியாக நாகேஷ்
- ராதாவாக இராம பிரபா
- கனகாவாக காந்திமதி
- ராணியாக அ. சகுந்தலா
- கல்லூரி முதல்வராக வீரராகவன்
- இளம்ராஜாவாக பூபதிராஜா
- இளம் ராமுவாக மாஸ்டர் கிரி
- ராம்லால் செட்டாக ஜெமினி மாலி
- அந்தோணிசாமியாக காமெடி சண்முகம்
- ராஜாவின் கல்லூரித் தோழராக டி. கே. எஸ். நடராஜன்
- ஆப்பக்கடை ஆயாவாக எஸ். ஆர். ஜானகி
இசை
[தொகு]கே. வி. மகாதேவன் இசையமைக்க கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[5] "இரவுக்கும் பகலுக்கும்" பாடல் மிகவும் பிரபலமான ஒன்றாக ஆனது.[6]
| பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
|---|---|---|
| "சாமியிலும் சாமி இது" | பி. சுசீலா | 04:04 |
| "கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:05 |
| "முத்தங்கள் நூறு" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈசுவரி | 03:13 |
| "கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்" | டி. எம். சௌந்தரராஜன் | 03:57 |
| "இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:50 |
| "இறைவா இறைவா கோடியில் ஒருவன்" | பி. சுசீலா | 04:01 |
வரவேற்பு
[தொகு]"நாகேஷ் நகைச்சுவைக் காட்சிகளில் சுடர்விட்டு பிரகாசிக்க, மனோகர் சண்டைக் காட்சிகளில் ஜமாய்கிறார்" என்று கல்கியின் காந்தன் குறிப்பிட்டார்.[3] இந்த படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 170– சுதாங்கன்". தினமலர். Nellai. 2 April 2017. Archived from the original on 7 November 2018. Retrieved 7 November 2018.
- ↑ "161-170". nadigarthilagam.com. Archived from the original on 27 February 2018. Retrieved 2 September 2014.
- ↑ 3.0 3.1 காந்தன் (29 July 1973). "எங்கள் தங்க ராஜா". Kalki. p. 52. Archived from the original on 27 July 2022. Retrieved 4 January 2022.
- ↑ "Yesteryear actor Manjula dead". தி இந்து. 23 July 2013 இம் மூலத்தில் இருந்து 2 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211202191927/https://www.thehindu.com/features/cinema/yesteryear-actor-manjula-dead/article4944754.ece.
- ↑ "Engal Thanga Raja". சரிகம. Archived from the original on 20 July 2022. Retrieved 20 July 2022.
- ↑ 6.0 6.1 "சென்னையில் 3 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய சிவாஜி, மஞ்சுளா ஜோடியின் முதல் படம்". News18. 14 July 2022. Archived from the original on 15 July 2022. Retrieved 21 July 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]- எங்கள் தங்க ராஜா பாடல்கள் ராகா.காம் தளத்தில்
