ஆந்திர மாநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
ஆந்திர மாநிலம்
ஆந்திராஷ்டிரம்
ఆంధ్రరాష్ట్రము
இந்திய முன்னாள் மாநிலம்

1953–1956
Location of {{{common_name}}}
Location of {{{common_name}}}
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தின் அமைவிடம்
தலைநகரம் கர்னூல்
அரசு மாநிலம்
முதலமைச்சசர்
 •  1953-1954 த. பிரகாசம்(முதல்)
 •  1955-1956 பேஜவாடா கோபால் ரெட்டி(கடைசி)
ஆளுநர்
 •  1953-1956 சந்துலால் மாதவ்லால் திரிவேதி (முதல் மற்றும் கடைசி)
வரலாறு
 •  ஆந்திர மாநில சட்டம், 1953
(சென்னை மாநிலத்தில் இருந்து பிரிக்கபட்டது)
1 அக்டோபர் 1953
 •  மாநில மறுசீரமைப்புச் சட்டம்
(ஐதராபாத் மாநிலத்தின் தெலுங்கு பேசும் பகுதிகள் ஒன்றிணைக்கபட்டன )
1 நவம்பர் 1956

ஆந்திரா மாநிலம் (Andhra State ) என்பது இந்தியாவின் முன்னாள் மாநிலம் ஆகும். இது 1953 இல் மதராஸ் மாநிலத்தில் இருந்த தெலுங்கு பேசும் வட மாவட்டங்களைப் பிரித்து புதியதாக உருவாக்கப்பட்ட ஒரு மாநிலமாகும். [1] இந்த மாநிலமானது இராயலசீமை மற்றும் கடற்கரை ஆந்திரா ஆகிய இரு வேறுபட்ட பண்பாட்டுப் பகுதிகளால் ஆனது. ஐதராபாத் இராச்சியத்தில் இருந்த சில பகுதிகளைத் தவிர்த்து ஆந்திரா மாநிலம் தெலுங்கு பேசும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. 1956 ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஆந்திரா மாநிலத்துடன் ஐதராபாத் இராச்சியத்தின் தெலுங்கு பேசும் பகுதிகளும் இணைக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

ஆந்திர மாநில உருவாக்கம்[தொகு]

மதராஸ் மாகாணம் (தெற்கு).
ஆந்திர மாநிலம் 1953 முதல் 1956 வரை (நீலத்தில் குறிக்கப்பட்டது)

மதராஸ் மாநிலத்தில் வாழும் தெலுங்கர்களின் நலன்களைப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பொட்டி சிறீராமுலு, மதராஸ் மாநிலத்தில் உள்ள தெலுங்கு பேசும் மாவட்டங்களை (இராயலசீமை மற்றும் கடலோர ஆந்திரா) பிரித்து ஆந்திர மாநிலம் அமைக்க வேண்டும் என்ற பொதுக் கோரிக்கையை ஏற்கவேண்டும் என்று சென்னை மாநில அரசை வற்புறுத்தினார். இக்கோரிக்கையை வலியுறுத்தி அவர் காலவரையற்ற உண்ணாநோண்பை மேற்கொண்டார். ஆந்திரா மாநிலத்தை அமைப்பதாக பிரதமர் ஜவகர்லால் நேரு வாக்குறுதி அளித்ததையடுத்து அதை நிறுத்தினார். ஆனால் ஆந்திர மாநிலம் உருவாவதில் தேவையான பணிகளில் முன்னேற்றம் ஏற்படாததைக் கண்ட அவர், 19 அக்டோபர் 1952 அன்று சென்னையிலுள்ள மகரிசி புலுசு சாம்பமூர்த்தியின் வீட்டில் மீண்டும் உண்ணாநோண்பைத் தொடங்கினார். ஆந்திர இதேகா உண்ணாநோண்பை ஏற்காத போதிலும் இது மக்களின் கவனத்தை ஈர்த்தது. தெலுங்கு மக்கள் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடத்திய போதிலும், புதிய மாநிலம் அமைப்பது குறித்து அரசாங்கம் தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை. திசம்பர் 15 நள்ளிரவில் (அதாவது 16 திசம்பர் 1952 தொடக்கத்தில்), உண்ணாநோண்பு இருந்த சிறீராமுலு இறந்தார். அர்வ இறந்த வீடு மாநில அரசால் நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. [2]

சிறீராமுலுவின் இறுதி ஊர்வலத்தின் போது, அவரது ஈகத்தை பாராட்டி மக்கள் முழக்கங்களை எழுப்பினர். பின்னர், வெறித்தனமாகச் சென்று பொதுச் சொத்துக்களை அழிக்கத் தொடங்கினர். சிராலா, விஜயநகரம், விசாகப்பட்டினம், விசயவாடா, ராஜமன்றி, ஏலூரு, பீமாவரம், பெல்லாரி, குண்டூர், தெனாலி, ஒங்கோல், நெல்லூர் போன்ற தொலைதூரப் பகுதிகளுக்கு இந்தச் செய்தி வேகமாகப் பரவி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனகாபள்ளி, விஜயவாடா போன்ற இடங்களில் காவல் துறையினருடன் நடந்த மோதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். மக்கள் போராட்டம் மூன்று முதல் நான்கு நாட்கள் தொடர்ந்ததால் சென்னை மற்றும் ஆந்திரா பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 1952 திசம்பர் 19 அன்று, நாட்டின் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு, மதராஸ் மாநிலத்தில் வாழும் தெலுங்கு மக்களுக்காக தனி மாநிலம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஆந்திர மாநிலம் அமைப்பது தொடர்பான பிரச்சனைகளை ஆராய இராசத்தான் உயர் நீதிமன்றத்தின் [3] தலைமை நீதிபதி கே. என். வாஞ்சூவை ஒன்றிய அரசு நியமித்தது. 1953 செப்டம்பரில் [4] ஆந்திர மாநில சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

1953 அக்டோபர் முதல் நாள், மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் பகுதியிலுள்ள 11 மாவட்டங்கள் கர்னூலைத் தலைநகராகக் கொண்டு புதிய ஆந்திர மாநிலமாக மாறியது. தங்குதூரி பிரகாசம் பந்துலு (ஆந்திர கேசரி என்றும் அழைக்கப்படுகிறார் - "ஆந்திராவின் சிங்கம்") புதிய மாநிலத்தின் முதல் முதலமைச்சரானார். [5]

இந்த முதல் "மொழிவழி மாநிலம்" உருவாக்கம் மேலும் பலமொழிவாரி மாநிலங்கள் உருவாக வழி வகுத்தது. இதனால் இந்த மாநிலங்கள் சுதந்திரமாக, மொழியியல் மற்றும் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய வாய்ப்பு ஏற்பட்டது. [6] [7]

ஆந்திர மாநில ஆளுநர்கள்[தொகு]

ஆந்திர மாநிலத்தின் ஆளுநர்கள் கடற்கரை ஆந்திரா மற்றும் இராயலசீமை பகுதிகளைக் கொண்டிருந்த ஆந்திரமாநிலத்தின் ஆளுநராக இருந்தனர். இந்த மாநிலம் 1953 இல் மதராஸ் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

# பெயர் உருவப்படம் பதவி ஏற்பு முடிவு கால நீளம்
1 சந்துலால் மாதவ்லால் திரிவேதி 1 அக்டோபர் 1953 31 அக்டோபர் 1956 1,127 நாட்கள்

ஆந்திர மாநில முதலமைச்சர்கள்[தொகு]

ஆந்திர மாநிலம் வட ஆந்திரா, கடலோர ஆந்திரா, இராயலசீமை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இந்த மாநிலம் 1953 இல் மதராஸ் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

எண். உருவப்படம் பெயர் தொகுதி பதவிக் காலம் சட்டமன்றம்

(தேர்தல்)

கட்சி
பதவி ஏற்பு முடிவு கால நீளம்
1 த. பிரகாசம்  – 1 அக்டோபர் 1953 15 நவம்பர் 1954 1 ஆண்டு, 45 நாட்கள் 1வது

(1952 தேர்தல்)

இந்திய தேசிய காங்கிரசு
காலி[a]

(President's rule)
N/A 15 நவம்பர் 1954 28 மார்ச் 1955 133 நாட்கள் N/A
2 பேஜவாடா கோபால் ரெட்டி ஆத்மகூர் 28 மார்ச் 1955 31 அக்டோபர் 1956 1 ஆண்டு, 217 நாட்கள்

(<small id="mwvw">1955 election</small>)

இந்திய தேசிய காங்கிரசு

ஆந்திர மாநில துணை முதல்வர்கள்[தொகு]

ஆந்திர மாநிலம் வட ஆந்திரா, கடற்கரை ஆந்திரா மற்றும் இராயலசீமை பகுதிகளை உள்ளடக்கியது. இந்த மாநிலம் 1953 இல் மதராஸ் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. பிரகாசம் மற்றும் பெசவாடா கோபால ரெட்டியின் அமைசரவையில் நீலம் சஞ்சீவ ரெட்டி துணை முதல்வராக பதவி வகித்தார். [9] பின்னர், ஆந்திர மாநிலம் ஐதராபாத் தெலுங்கானா மாகாணத்துடன் இணைக்கப்பட்டு 1956 நவம்பரில் ஆந்திரப் பிரதேசம் உருவாக்கபட்டது.

எண். உருவப்படம் பெயர் தொகுதி பதவிக் காலம் சட்டமன்றம்

(தேர்தல்)

Party
பதவி ஏற்பு முடிவு கால நீளம்
1 நீலம் சஞ்சீவ ரெட்டி  – 1 அக்டோபர் 1953 15 நவம்பர் 1954 1st

(1952 தேர்தல்)

இந்திய தேசிய காங்கிரசு
Vacant[a] N/A 15 நவம்பர் 1954 28 மார்ச் 1955 133 நாட்கள் N/A
2 நீலம் சஞ்சீவ ரெட்டி சிறீகாலத்தி மார்ச் 1955 31 அக்டோபர் 1956

(<small id="mwARI">1955 election</small>)

இந்திய தேசிய காங்கிரசு

ஆந்திர மாநிலத்தின் மாவட்டங்களின் பட்டியல்[தொகு]


ஆந்திர மாநிலம் உருவானபோது பதினொரு மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. [10]

அதிகாரப்பூர்வ பெயர் பிரிவு வரைபடம்
ஸ்ரீகாகுளம் கடலோர ஆந்திரா பகுதி
விசாகப்பட்டினம்
கிழக்கு கோதாவரி [b]
மேற்கு கோதாவரி
கிருஷ்ணா [c]
குண்டூர்
நெல்லூர்
சித்தூர் இராயலசீமை பகுதி
கடப்பா
அனந்தபுரம்
கர்நூல்
பெல்லாரி மாவட்டம் [d]

விசாலாந்திரா இயக்கம்[தொகு]

விசாலாந்திரா அல்லது விசால ஆந்திரா என்பது இந்திய விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் தெலுங்கு பேசும் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைந்து அகன்ற ஆந்திரப் பிரதேசமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக உருவான ஒரு இயக்கம் ஆகும். தெலுங்கு பேசும் பகுதிகள் அனைத்தையும் ஒரே மாநிலமாக ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆந்திர மகாசபா என்ற பதாகையின் கீழ் இந்த இயக்கம் இந்தியப் பொதுவுடமைக் கட்சியால் வழிநடத்தப்பட்டது.[சான்று தேவை] (இந்திய பொதுவுடமைக் கட்சி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக் கோரியது. ) இந்த இயக்கம் வெற்றியடைந்து, மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக 1 நவம்பர் 1956 அன்று ஆந்திர மாநிலத்துடன் ஐதராபாத் மாநிலத்தின் (தெலுங்கானா) தெலுங்கு பேசும் பகுதிகளை இணைக்கபட்டு அதன் வழியாக ஆந்திரப் பிரதேசம் என்ற தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. (ஆந்திரா மாநிலம் முன்பு 1953 அக்டோபர் முதல் நாள் அன்று மதராஸ் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இருப்பினும், 2014 சூன் இரண்டாம் நாளன்று, தெலங்காணா மாநிலம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மீண்டும் பிரிக்கப்பட்டது. இதனால் விசாலந்திரா என்ற சோதனை முயற்சி முடிவுக்கு வந்தது. எஞ்சியிருக்கும் ஆந்திரப் பிரதேசம் இப்போது தோராயமாக அதே எல்லைகளைக் கொண்டுள்ளது.

ஐக்கிய ஆந்திரப் பிரதேசம் உருவாக்கம்[தொகு]

ஆந்திரா மாநிலம் (மஞ்சள்), இது தெலுங்கானாவுடன் (வெள்ளை) ஒன்றிணைந்து 1956 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலத்தை உருவாக்கியது.

1956 நவம்பர் முதல் நாளன்று ஆந்திரா மாநிலமும், ஐதராபாத் மாநிலத்தின் தெலங்காணா பகுதியும் ஒன்றிணைந்து தெலுங்கு மக்களுக்கான ஒற்றை மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலம் உருவாகியது. ஐதராபாத் மாநிலத்தின் தெலுங்கு பேசாத பகுதிகள் பம்பாய் மாநிலம் மற்றும் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டன. 1956 இல் மாநில மறுசீரமைப்பிற்குப் பிறகு, ஐதராபாத் மாநிலத்தின் மேற்குப் பகுதிகளான சிவப்பு மற்றும் நீலக் கோடுகள் முறையே பம்பாய் மற்றும் மைசூர் மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. மேலும் மாநிலத்தின் மற்ற பகுதிகள் ( தெலங்காணா ) ஆந்திரா மாநிலத்துடன் இணைக்கப்பட்டு ஆந்திரப் பிரதேச மாநிலம் உருவாகியது.

மேலும் பார்க்கவும்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 குடியரசுத் தலைவர் ஆட்சி may be imposed when the "government in a state is not able to function as per the Constitution", which often happens because no party or coalition has a majority in the assembly. When President's rule is in force in a state, its council of ministers stands dissolved. The office of chief minister thus lies vacant, and the administration is taken over by the governor, who functions on behalf of the central government. At times, the legislative assembly also stands dissolved.[8]
  2. பத்ராச்சலம் and Nuguru Venkatapuram taluks of கிழக்கு கோதாவரி மாவட்டம் (part of coastal Andhra Pradesh), which are on the other side of the கோதாவரி, were merged into கம்மம் மாவட்டம் on grounds of geographical contiguity and administrative viability. Earlier, Aswaraopeta was also part of கோதாவரி மாவட்டம் and was added to Khammam district in 1959.
  3. Similarly, Munagala mandal was added to நல்கொண்டா மாவட்டம் and removed from கிருஷ்ணா மாவட்டம் in 1959,And Ballari district shifted to Karnataka State because of having significant கன்னடம் speaking people.
  4. Later பெல்லாரி மாவட்டம் was shifted to கருநாடகம் but three of its Taluks were merged with அனந்தபூர் மாவட்டம். They were Adoni, Alur and Rayadurg.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திர_மாநிலம்&oldid=3676815" இருந்து மீள்விக்கப்பட்டது