ராமசந்திர குகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமசந்திர குகா
रामचंद्र गुहा Edit on Wikidata
பிறப்பு29 ஏப்பிரல் 1958 (அகவை 65)
தேராதூன்
படித்த இடங்கள்
பணிவரலாற்றாளர், ஆசிரியர், பத்திரிக்கையாளர்
வேலை வழங்குபவர்
விருதுகள்சாகித்திய அகாதமி விருது, honorary doctor of the Yale University
இணையம்http://ramachandraguha.in/
கையெழுத்து
கோழிக்கோடு ராமசந்திர குகா

ராமசந்திர குகா (பிறப்பு 1958), சுற்றுச்சூழல், சமூகம், அரசியல் மற்றும் மட்டைப்பந்து சார்ந்த வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றைப் பற்றி எழுதும் ஒரு இந்திய எழுத்தாளர்.

வாழ்வும் வாழ்க்கைத் தொழிலும்[தொகு]

1958இல் டேரா டூனில் பிறந்த குகா, டூன் பள்ளியிலும் அதன் பின்னர் புனித ஸ்டீபன் கல்லூரி, தில்லியிலும் பயின்றார். பொருளியலில் முதுகலைப் பட்டத்தை பொருளியலுக்கான தில்லி பள்ளியிலிருந்து பெற்றார். முனைவர் பட்டத்தை கொல்கத்தாவிலுள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் பெற்றார். உத்தராஞ்சல் மாநிலக்காடுகளில் ஏற்பட்ட சிப்கோ இயக்கத்தைப் பற்றிய அவரது முனைவர்-பட்ட ஆய்வு பின்னர் அமைதியற்ற மரங்கள் (unquiet woods) என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டது.1985 முதல் 2000 வரை இந்தியா, ஐரோப்பா, வட அமெரிக்கா பல்கலைக்கழகங்களில் ஆசிரியப்பணி ஆற்றினார். இவற்றில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம்,பெர்க்லி, யேல் பல்கலைக்கழகம்,இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்லோ பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அறிவியல் கழகம் அடங்கும். (1994-95) காலகட்டத்தில் யெர்மனியின் Wissenschaftskolleg zu Berlin கழகத்தில் சிறப்பாசிரியராக (fellow) இருந்தார்

இதன்பின்னர் பெங்களூரு நகரில் இந்திய அறிவியல் கழகத்தில் வருகை பேராசிரியராக 2003இல் பணிபுரிந்தார். தொடர்ச்சியாக புத்தகங்கள் எழுத ஆரம்பித்தார். நவீன இந்திய வரலாற்றினை ஆய்வு செய்யும் நியூ இந்தியா பவுண்டேசன் (New India Foundation) என்ற இலாபநோக்கில்லா அமைப்பின் செயல் அறங்காவலர்.

ஆடை வரைவாளர் சுஜாதா கேசவனை மணந்து இரு குழந்தைகளுக்கு தந்தையாவார்.

"இந்திய வரலாறு:காந்திக்குப் பிறகு"(India after Gandhi), என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டில் ஆங்கில மூலம் மாக்மில்லன் பதிப்பகத்தாராலும் எக்கோ பதிப்பகத்தாலும் தமிழ் மொழியாக்கம் 2009ஆம் ஆண்டு கிழக்கு பதிப்பகத்தாலும் வெளியிடப்பட்டது.[1]

விருதுகள்[தொகு]

2009 ஆம் ஆண்டுக்கான பத்ம பூசண் விருது [2].

குகா எழுதியுள்ள நூல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழாக்க வெளியீடு போது இராமசந்திர குகா பேச்சு
  2. "Padma Bhushan for Shekhar Gupta, Abhinav Bindra". பார்க்கப்பட்ட நாள் 2009-01-26.
  3. Sahitya Akademi(21 December 2011). "POETS DOMINATE SAHITYA AKADEMI AWARDS 2011". செய்திக் குறிப்பு.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமசந்திர_குகா&oldid=3862203" இலிருந்து மீள்விக்கப்பட்டது