பேஜவாடா கோபால் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேஜவாடா கோபால் ரெட்டி
பிறப்புபேஜவாடா கோபால் ரெட்டி
5 ஆகஸ்டு 1907
நெல்லூர், சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்போது ஆந்திர பிரதேசம், இந்தியா)
இறப்பு9 மார்ச்சு 1997(1997-03-09) (அகவை 89)
தேசியம்இந்தியர்

பேஜவாடா கோபால் ரெட்டி (5 ஆகஸ்டு 1907 – 9 மார்ச் 1997) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக (28 மார்ச் 1955 - 1 நவம்பர் 1956) பணியாற்றினார். இந்தியாவின் உத்திர பிரதேசம் மாநிலத்தின் ஆளுநராகவும் (1 மே 1967 – 1 ஜூலை 1972) இருந்துள்ளார். இவர் ஆந்திர தாகூர் என அனைவராலும் அழைக்கப்பட்டார். கோபால் ரெட்டி மற்றும் அவருடைய மனைவி இருவரும் ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் நிறுவப்பட்ட சாந்திநிகேதனில் பயின்றனர். அந்த காலகட்டத்தில் பேஜவாடா கோபால் ரெட்டி தாகூர் அவர்களின் பணிகளை விரும்பி ஏற்றுக்கொண்டும் அவருடைய பல நூல்களை தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்தார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-16. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
  2. http://rulers.org/1997-03.html Rulers
  3. https://web.archive.org/web/20130605004856/http://www.cpbrownacademy.org/dr_Bejawada_Gopala_Reddy_Biography.asp "'Sahithi Brindavana Sanchary' Dr. Bejawada Gopala Reddy" from C. P. Brown Academy
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேஜவாடா_கோபால்_ரெட்டி&oldid=3845043" இலிருந்து மீள்விக்கப்பட்டது