சித்தூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சித்தூர் மாவட்டம்
చిత్తూరు జిల్లా
மாவட்டம்
Location of சித்தூர் மாவட்டம்
ஆள்கூறுகள்: 18°25′N 84°01′E / 18.417°N 84.017°E / 18.417; 84.017ஆள்கூறுகள்: 18°25′N 84°01′E / 18.417°N 84.017°E / 18.417; 84.017
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பரப்பளவு
 • மொத்தம்15,359 km2 (5,930 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்41,70,468[1]
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுISO 3166-2:IN
தலைமையகம்சித்தூர்
பாலின விகிதம்ஆண்-50%/பெண்-40% /
கல்வியறிவு72.96%
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள்2
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிகள்14

சித்தூர் மாவட்டம் (தெலுங்கு: చిత్తూరు జిల్లా) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் சித்தூர் நகரில் உள்ளது. 15,359 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 4,170,468 மக்கள் வாழ்கிறார்கள். இதன் வடமேற்கில் அனந்தபூர் மாவட்டமும் வடக்கில் கடப்பா மாவட்டமும் வடகிழக்கில் நெல்லூர் மாவட்டமும் தெற்கில் தமிழ்நாடு மாநிலமும் மேற்கில் கர்நாடக மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

1905-ஆம் ஆண்டு வட ஆற்காடு, கடப்பா, நெல்லூர் மாவட்டங்களில் இருந்து சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தில் சித்தூர், திருப்பதி ஆகிய இரண்டு பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன.[3]

ஆந்திர மாநில சட்டமன்றத்திற்கான 14 தொகுதிகள் இங்குள்ளன. அவை தம்பள்ளபள்ளி, பீலேரு, மதனபள்ளி, புங்கனூர், சந்திரகிரி, திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, சத்தியவேடு, நகரி, கங்காதர நெல்லூர், சித்தூர், பூதலபட்டு, பலமனேரு, குப்பம் ஆகியன.[3]

இந்த மாவட்டத்தில் சித்தூர், திருப்பதி, மதனபள்ளி ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் திருப்பதி, சித்தூர் ஆகிய ஊர்கள் மாநகராட்சிகளாகும். மதனபள்ளி, காளஹஸ்தி, புங்கனூர், பலமனேரு, புத்தூர், நகரி ஆகிய ஊர்கள் நகராட்சிகளாகும்.

இந்த மாவட்டத்தை 66 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். மொத்தமாக 1399 ஊர்கள் உள்ளன. [4].

1 பெத்தமண்டியம் 23 கே. வி. பி. புரம் 45 நகரி
2 தம்பள்ளபள்ளி 24 நாராயணவனம் 46 கார்வேட்டிநகரம்
3 முலகலசெருவு 25 வடமாலபேட்டை 47 ஸ்ரீரங்கராஜபுரம்
4 பெத்ததிப்ப சமுத்திரம் 26 திருப்பதி ஊரகம் 48 பாலசமுத்திரம்
5 பி. கொத்தகோட்டை 27 ராமசந்திராபுரம் 49 கங்காதர நெல்லூர்
6 குரபலகோட்டை 28 சந்திரகிரி 50 பெனுமூர்
7 குர்ரங்கொண்டா 29 சின்னகொட்டிகல்லு 51 பூதலபட்டு
8 கலகடா 30 ரொம்பிசெர்லா 52 ஐராலா
9 கம்பம்வாரிபள்ளி 31 பீலேரு 53 தவனம்பள்ளி
10 யெர்ராவாரிபாலம் 32 கலிகிரி 54 சித்தூர்
11 திருப்பதி நகரம் 33 வாயல்பாடு 55 குடிபாலா
12 ரேணிகுண்டா 34 நிம்மன்னபள்ளி 56 யாதமரி
13 ஏர்ப்பேடு 35 மதனபள்ளி 57 பங்காருபாலம்
14 ஸ்ரீகாளஹஸ்தி 36 ராமசமுத்திரம் 58 பலமனேரு
15 தொட்டம்பேடு 37 புங்கனூர் 59 கங்கவரம்
16 புச்சிநாயுடு கண்டுரிகா 38 சௌடேபள்ளி 60 பெத்தபஞ்சனி
17 வரதய்யபாலம் 39 சோமலா 61 பைரெட்டிபள்ளி
18 சத்தியவேடு 40 சோதம் (சதும்) 62 வெங்கடகிரி கோட்டை
19 நாகலாபுரம் 41 புலிசெர்லா 63 ராமகுப்பம்
20 பிச்சாடூர் 42 பாகாலா 64 சாந்திபுரம்
21 விஜயபுரம் 43 வெதுருகுப்பம் 65 குடுபள்ளி
22 நிந்திரா 44 புத்தூர் 66 குப்பம்

குறிப்பிடத்தக்க நகரங்கள்[தொகு]

நிகழ்வு[தொகு]

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சித்தூர் மாவட்ட மேயர் கட்டாரி அனுராதா 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார். [5]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Chittoor district profile". Andhra Pradesh State Portal. மூல முகவரியிலிருந்து 15 ஜூலை 2014 அன்று பரணிடப்பட்டது.
  2. "District - Chittoor". Andhra Pradesh Online Portal. மூல முகவரியிலிருந்து 24 டிசம்பர் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 August 2014.
  3. 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2010-10-05 அன்று பரணிடப்பட்டது.
  4. ஊராட்சி மன்ற இணையதளம் சித்தூர் மாவட்டம் - விவரங்கள். சேகரித்த தேதி - சூலை 26, 2007
  5. மேயர் அனுராதா சுட்டுக் கொலை; கணவர் படுகாயம் தி இந்து தமிழ் டிசம்பர் 8 2015

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தூர்_மாவட்டம்&oldid=3347356" இருந்து மீள்விக்கப்பட்டது