பார்வதிபுரம் மண்யம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்வதிபுரம் மண்யம்

పార్వతీపురం మన్యం (தெலுங்கு)
மாவட்டம்
மேல் இடதுபுறத்தில் இருந்து கடிகார திசையில்: கல்லாவில்லி கமலலிங்கேஸ்வரர் கோயில், பெட்டா கெடா அணை, சாலூரில் வேதவதி ஆறு, பார்வதிபுரத்தில் இருந்து கிழக்குத் தொடர்ச்சி மலையின் காட்சி, பாலகொண்டா அருகே காட்சி
ஆந்திரப் பிரதேசத்தில் பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தின் இருப்பிடம்
ஆந்திரப் பிரதேசத்தில் பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தின் இருப்பிடம்
Map
பார்வதிபுரம் மண்யம் மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிவட ஆந்திரா
நிறுவப்பட்டது4 ஏப்ரல் 2022
தோற்றுவித்தவர்ஆந்திரப் பிரதேச அரசு
தலைமையிடம்பார்வதிபுரம்
மண்டலங்கள்15
அரசு[1]
 • மாவட்ட ஆட்சித் தலைவர்திரு. நிஷாந்த் குமார், இ.ஆ.ப
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்திரு. வித்யா சாகர் நாயுடு, இ.கா.ப
பரப்பளவு[2]
 • மொத்தம்3,659 km2 (1,413 sq mi)
மக்கள்தொகை [2]
 • மொத்தம்2.29 இலட்சம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு+91
இணையதளம்parvathipurammanyam
.ap.gov.in

பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் (Parvathipuram Manyam district), 4 ஏப்ரல் 2022 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக நிறுவப்பட்ட 13 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.[3] இதோடு ஆந்திராவில் தற்போது 26 மாவட்டங்கள் உள்ளது.[4]

விஜயநகர மாவட்டத்தின் பார்வதிபுரம் வருவாய்க் கோட்டம் மற்றும் சிறீகாகுளம் மாவட்டத்தின் பள்ளிகொண்டா வருவாய்க் கோட்டத்தின் பகுதிகளைக் கொண்டு பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் 4 ஏப்ரல் 2022 அன்று நிறுவப்பட்டது.[5][6][7][8] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் பார்வதிபுரம் ஆகும்.

3659 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 9.25 இலட்சம் ஆகும். இதன் எழுத்தறிவு 50.9%.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

பாரவதிபுரம் மண்யம் மாவட்டம் பள்ளிகொண்டா மற்றும் பார்வதிபுரம் என இரண்டு வருவாய்க் கோட்டகள் கொண்டது. இம்மாவட்டம் 15 மண்டல்களாகவும் மற்றும் 910 கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 2 நகராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் கொண்டுள்ளது.

மண்டல்கள்[தொகு]

பார்வதிபுரம் மண்யம் மாவட்ட மண்டலங்கள்

பார்வதிபுரம் வருவாய் கோட்ட 7 மண்டல்களாகவும், பள்ளிக்கொண்டா கோட்டம் 8 மண்டல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:

# பள்ளிகொண்டா வருவாய் கோட்டம் பார்வதிபுரம் வருவாய் கோட்டம்
1 பள்ளிகொண்டா பார்வதிபுரம்
2 சீதம்பேட்டை சீதாநகரம்
3 பாமினி பலிஜிபேட்டை
4 வீரராகட்டம் சாலூர்
5 ஜிய்யம்மவலசா பாசிபெண்டா
6 கும்மலட்சுமிபுரம் மக்குவா
7 குருபாம் கொமரதா
8 கருகுபில்லி

அரசியல்[தொகு]

இம்மாவட்டம்அரக்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. மற்றும் 8 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.[9]

தொகுதி எண்

(2014 க்கு பின்)

தொகுதி பழைய எண் (2014 க்கு முன்) சட்டப் பேரவையின் தொகுதிகள் ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது தொகுதி எண் (2014 க்கு பின்) தொகுதி பழைய எண் (2014 க்கு முன்) மக்களவை தொகுதிகள் ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது
10 129 பாலகொண்டா பட்டியல் பழங்குடி 1 18 அரக்கு பட்டியல் பழங்குடி
11 130 குருபாம்
12 131 பார்வதிபுரம் பட்டியல் சாதி
13 132 சாலூர் பட்டியல் பழங்குடி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]