அன்னமய்யா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்னமய்யா மாவட்டம்
மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
நிறுவப்பட்ட நாள்4 ஏப்ரல் 2022
தோற்றுவித்தவர்ஆந்திரப் பிரதேச அரசு
பெயர்ச்சூட்டுஅன்னமாச்சாரியார்
தலைமையிடம்ராயச்சோட்டி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்https://annamayya.ap.gov.in/
தெலுங்கு இசை கவிஞர் அன்னமாச்சாரியார் சிற்பம்

அன்னமய்யா மாவட்டம் (Annamayya district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் ராயச்சோட்டி நகரம் ஆகும். சித்தூர் மாவட்டத்தின் மதனப்பள்ளி வருவாய் கோட்டம், ஒய் எஸ் ஆர் கடப்பா மாவட்டத்தின் ராயச்சோட்டி வருவாய் கோட்டம் மற்றும் புதிதாக நிறுவப்பட்ட ராஜம்பேட் வருவாய் கோட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று அன்னமாச்சாரியார் நினைவாக அன்னமய்யா மாவட்டம் நிறுவப்பட்டது.[2]

8,457 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 17.67 இலட்சம் ஆகும்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களையும், 30 மண்டல்களையும், 463 வருவாய் கிராமங்களைக் கொண்டது. மேலும் இம்மாவட்டம் ராஜம்பேட், ராயச்சோட்டி மற்றும் மதனப்பள்ளி என 3 நகராட்சிகளையும் கொண்டது.

மண்டல்கள்[தொகு]

# ராஜம்பேட் வருவாய் கோட்டம் ராயச்சோட்டி வருவாய் கோட்டம் மதனப்பள்ளி வருவாய் கோட்டம்
1 பி. கோடூரு ராயச்சோட்டி மதனப்பள்ளி
2 பெனகளூர் சம்பெபள்ளி நிம்மனப்பள்ளி
3 சித்வேலு சின்னமண்டயம் ராமசமுத்திரம்
4 புள்ளம்பேட்டை காளிவீடு தம்பளளபள்ளி
5 ஓபுளாவாரிபள்ளி லக்கிரெட்டிப்பள்ளி மூலக்கலசெருவு
6 ராஜம்பேட் ராமாபுரம் பெத்தமண்டயம்
7 நந்தலூரூ பிலெரூ குரபாலகோட்டை
8 வீரப்பள்ளி குர்ரம்கொண்டா பெத்த திப்பசமுத்திரம்
9 டி. சுந்துப்பள்ளி களக்காடா பி. கொத்தகோட்டை
10 கம்பம்வாரிப்பள்ளி காளிகிரி
11 வால்மீகிபுரம்

அரசியல்[தொகு]

இம்மாவட்டம் ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னமய்யா_மாவட்டம்&oldid=3412691" இருந்து மீள்விக்கப்பட்டது