அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்லூரி சீதாராம இராசு
மாவட்டம்
Location of அல்லூரி சீதாராம இராசு
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிஉத்தராந்திரா
நிறுவப்பட்ட நாள்4 ஏப்பிரல் 2022
தோற்றுவித்தவர்ஆந்திரப் பிரதேச அரசு
பெயர்ச்சூட்டுஅல்லூரி சீதாராம இராஜு
தலைமையிடம்பதேரு
பரப்பளவு[1]
 • மொத்தம்12,253 km2 (4,731 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்9.54 இலட்சம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி+91
இணையதளம்allurisitharamaraju.
ap.gov.in

சிறீ அல்லூரி சீதாராம இராஜு (Alluri Sitharama Raju district), 4 ஏப்ரல் 2022 ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக நிறுவப்பட்ட 13 மாவட்டங்களில் மற்றும் 26 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பதேரு ஆகும்.[2][3] இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், பழங்குடியின தலைவருமான அல்லூரி சீதாராம இராஜுவின் நினைவாக இப்புதிய மாவட்டத்திற்கு பெயரிடப்பட்டது.

விசாகப்பட்டினம் மாவட்டத்தின் பதேரு வருவாய் கோட்டம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ராம்பச்சோதவரம் வருவாய் கோட்டத்தின் பகுதிகளை அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் நிறுவப்பட்டது.[4][5][6]

12,251 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிறீ அல்லூரி சீதாராம இராஜு மாவட்டத்தின் மக்கள் தொகை 9.54 இலட்சம் ஆகும். இதன் எழுத்தறிவு 48.34% ஆகும்.

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

சீதாராம அல்லூரி இராஜு மாவட்டம் பதேரு மற்றும் ராம்பச்சோதவரம் என வருவாய் கோட்டங்களும், 22 மண்டல்களும், 2972 கிராமங்களும் கொண்டது.

மண்டல்கள்

மண்டல்கள்[தொகு]

பதேரு வருவாய் கோட்டத்தில் 11 மண்டல்களும்; ராம்பச்சோதவரம் கோட்டத்தில் 11 மண்டல்களும் கொண்டது.

# பதேரு வருவாய் கோட்டம் ராம்பச்சோதவரம் வருவாய் கோட்டம்
1 அரக்கு வேலி ராம்பச்சோதவரம்
2 பெத்த ராயலு தேவிப்பட்டினம்
3 தும்பிரிகுடா ஒய். இராமாவரம்
4 முன்சிங்கி புத்து அட்டாடீகலா
5 ஹுக்கும்பேட்டை கங்காவரம்
6 ஆனந்தகிரி மரேதுமில்லி
7 பதேரு]] இராஜவோம்மங்கி
8 ஜி. மடுகுலா எட்டபாகா
9 சிந்தாபள்ளி சிந்துரு
10 குதேம் கோதா வீதி குணவரம்
11 கொய்யுரு வரராமச்சந்திரபுரம்

அரசியல்[தொகு]

சட்டப் பேரவையின் தொகுதிகள் (2008-2014)
மக்களவை தொகுதிகள் (2008-2014)
சட்டப் பேரவையின் தொகுதிகள் (2014-)
மக்களவை தொகுதிகள் (2014-)

இம்மாவட்டம் ஒரு மக்களவைத் தொகுதியும், 3 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.[7]

தொகுதி எண் தொகுதி பழைய எண் சட்டப் பேரவையின் தொகுதிகள் ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது தொகுதி எண் தொகுதி பழைய எண் மக்களவை தொகுதிகள் ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது
28 147 அரக்குலோயா சட்டமன்றத் தொகுதி ST 1 18 அரக்கு மக்களவைத் தொகுதி ST
29 148 பாடேரு சட்டமன்றத் தொகுதி
53 172 ராம்பாசோடவரம் சட்டமன்றத் தொகுதி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 https://allurisitharamaraju.ap.gov.in/demography/
  2. Andhra Pradesh adds 13 new districts
  3. A.P. to have 26 districts from 04 April 2022
  4. Raghavendra, V. (26 January 2022). "With creation of 13 new districts, AP now has 26 districts". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220126110443/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/with-creation-of-13-new-districts-ap-now-has-26-districts/article38327788.ece. 
  5. "New districts to come into force on April 4". தி இந்து (in ஆங்கிலம்). 30 March 2022. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. "కొత్త జిల్లా తాజా స్వరూపం". Eenadu.net (in தெலுங்கு). 31 March 2022. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. "District-wise Assembly-Constituencies". ceoandhra.nic.in.

வெளி இணைப்புகள்[தொகு]