உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டிபிரோலு

ஆள்கூறுகள்: 16°06′09″N 80°46′51″E / 16.1026°N 80.7807°E / 16.1026; 80.7807
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டிபிரோலு
Bhattiprolu
பௌத்தப் பெருந்தூபி, பட்டிபிரோலு கிராமம், குண்டூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா
பௌத்தப் பெருந்தூபி, பட்டிபிரோலு கிராமம், குண்டூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா
பட்டிபிரோலு Bhattiprolu is located in ஆந்திரப் பிரதேசம்
பட்டிபிரோலு Bhattiprolu
பட்டிபிரோலு
Bhattiprolu
இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் பாட்டிப்பொரலூ கிராமத்தில் பெருந்தூபியின் அமைவிடம்
பட்டிபிரோலு Bhattiprolu is located in இந்தியா
பட்டிபிரோலு Bhattiprolu
பட்டிபிரோலு
Bhattiprolu
பட்டிபிரோலு
Bhattiprolu (இந்தியா)
ஆள்கூறுகள்: 16°06′09″N 80°46′51″E / 16.1026°N 80.7807°E / 16.1026; 80.7807
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
மண்டலம்பட்டிபிரோலு மண்டலம்
அரசு
 • வகைகிராம ஊராட்சி
 • நிர்வாகம்பட்டிபிரோலு ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்25.15 km2 (9.71 sq mi)
ஏற்றம்6 m (20 ft)
மக்கள்தொகை
 (2011)[3]
 • மொத்தம்11,092
 • அடர்த்தி440/km2 (1,100/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுAP
ஆந்திரப்பிரதேசத்திலுள்ள பௌத்த புனித நினைவுக் கட்டிடங்கள்

பட்டிபிரோலு (Bhattiprolu) இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தின், தெனாலி கோட்டத்தில் உள்ள பாட்டிப்பிரொலு மண்டலத்தில் உள்ள தொல்லியல் கிராமம் ஆகும்.[4] [5]பட்டிபிரோலு கிராமத்தில் உள்ள பௌத்தத் தூபி, பாதுகாக்கப்படவேண்டிய தேசிய முக்கியத்தவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களில் ஒன்றாக உள்ளது.[6]

வரலாறு

[தொகு]

சாதவாகனர்கள் ஆட்சிக் காலத்தில் பட்டிபிரோலு கிராமத்தின் உண்மையான பெயர் பிரதிபாலபுரம் ஆகும். கிடைத்த ஆவணங்களின் படி, இப்பகுதியை மன்னர் குபேரகன், கிமு 230ல் ஆட்சி செய்த காலத்தில் பட்டிபிரோலு கிராமத்தில், கிமு 3 - 2-ஆம் நூற்றாண்டுகளில் பௌத்த பிக்குகள் அறம் பயில பெருந்தூபிகள் எழுப்பப்பட்டது.

தூபியும், எழுத்துக்களும்

[தொகு]

1870ல் பட்டிபிரோலு கிராமத்தில் மூன்று தொல்லியல் மண்மேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. 1892ல் அம்மண்மேடுகளை அலெக்சாண்டர் ரியா எனும் பிரித்தானிய தொல்லியலாளர் தூபியை அகழ்வாய்வு செய்த போது, ஒரு கல் பேழையில், கௌதம புத்தரின் உருவம் பொறித்த படிகப் பேழையும், நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டது. [7] மேலும் 2.4 மீட்டர் அகலமுள்ள அடித்தளத்துடன், 40 மீட்டர் சுற்றளவுடன் கூடிய தூபியும் கண்டறியப்பட்டது. புத்தரின் ஏரியூட்டப்பட்ட உடலின் சாம்பல் மற்றும் சில துண்டு எலும்புகள் வைத்திருந்த படிகக் கல் பேழை, தூபியை அகழ்வாய்வு செய்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சிதிலமடைந்த பெருந்தூபியின் மண்டபத்தை தாங்கும் தூண்கள் மட்டுமே தற்போது காணக்கிடைக்கிறது. தூபியில் பல தோற்றத்தில் கானப்படும் புத்தரின் சிற்பங்கள் உள்ளது.

மேலும் சிதிலமடந்த சிறு தூபிகளை அகழாய்வு செய்ததில் புத்தரின் சிற்பங்கள், செப்புப் பாத்திரங்கள், வெள்ளிப் பேழைகள் மற்றும் தங்கப் பேழைகள் கண்டெடுக்கப்பட்டது.

பட்டிபிரோலு பௌத்த தொல்லியல் களத்தின் பௌத்த நினைவுச் சின்னப் பொருட்கள் மீது தமிழ் பிராமி எழுத்துகள் எழுதப்பட்டிருந்தது. [8]சில வரலாற்று அறிஞர் இவ்வெழுத்துகளை பாட்டிப்பிரொலு எழுத்து முறை என்பர். பாட்டிப்பிரொலு எழுத்தே பின்னர் தெலுங்கு மற்றும் கன்னட மொழிக்கான எழுத்தாக மறுவியது கூறுகிறார்கள். [9]

1883ல் இப்பகுதியில் விரிவாக்கம் செய்த பொதுப் பணித் துறையினர், இங்கிருந்த பல தூபிகளை உடைத்தனர் என கிருஷ்ணா மாவட்ட கையேடு கூறுகிறது.[10]

புவியியல்

[தொகு]

ஆந்திரப்பிரதேசத்தில் பட்டிபிரோலு கிராமம் மற்றும் தூபி 16°06′09″N 80°46′51″E / 16.1026°N 80.7807°E / 16.1026; 80.7807 பாகையில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District Census Handbook – Guntur" (PDF). Census of India. p. 14,474. பார்க்கப்பட்ட நாள் 22 September 2015.
  2. "Maps, Weather, and Airports for Bhattiprolu, India". fallingrain.com.
  3. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 1 August 2014.
  4. "Adminsistrative divisions of Guntur district" (PDF). guntur.nic.in. பார்க்கப்பட்ட நாள் 26 May 2014.
  5. "District wise mandals and villages covered in Krishna and Guntur districts" (PDF). Andhra Pradesh Capital Region Development Authority. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Centrally Protected Monuments". Archeological Survey of India (in ஆங்கிலம்). Archived from the original on 26 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 May 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Sajnani, Manohar (2001). Encyclopaedia of tourism resources in India. New Delhi: Kalpaz Pub. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-018-9. பார்க்கப்பட்ட நாள் 26 November 2015.
  8. "Ananda Buddha Vihara". Archived from the original on 2007-10-14. பார்க்கப்பட்ட நாள் 2018-11-03.
  9. "Epigraphist extraordinaire". The Hindu. Archived from the original on 2007-03-26. பார்க்கப்பட்ட நாள் 2018-11-03.
  10. Mackenzie, Gordon (1883-01-01). A Manual of the Kistna District in the Presidency of Madras (in ஆங்கிலம்). Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120605442.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டிபிரோலு&oldid=3561577" இலிருந்து மீள்விக்கப்பட்டது