ஆந்திர இசுவாகு மரபினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆந்திர இசுவாகுகள் (சமசுகிரதம் इक्ष्वाकु, தெலுங்கு ఇక్ష్వాకులు) என்பவர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் பழமையான அரச மரபுகளில் ஒன்றாகும். இவர்கள் ஆந்திரத்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் குண்டூர் -கிருஷ்ணா-நலகொண்டா வட்டாரத்தில் ஆட்சி செலுத்தியவர்கள். இவர்கள் தெலுங்குப் பகுதிகளை கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதிகளை கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஆண்டனர்.[1] இவர்களின் தலைநகராக நாகார்ஜுனகொண்டா இருந்தது. இந்த இச்சுவாகு மரபினர் மேற்கு சத்ரபதிகளுடன் தொடர்பு படுத்தப்படுகின்றனர். இந்த ஆந்திர உள்ளூர் இச்சுவாகுவினர் அந்த புராண இச்சசுவாகு மரபினரின் பெயரை பட்டமாக ஏற்றிருக்கக்கூடும்.[2]

தொல்லியல் சான்றுகளின்படி ஆந்திர இச்சுவாகு மரபினர் கிருஷ்ணா ஆற்று வடிநிலப்பகுதியில் சாதவாகனர்களை வெற்றி கொண்டதாக அறியப்படுகிறது. இச்சுவாகு மரபினரின் கல்வெட்டுகள் நாகார்ஜுனகொண்டா, ஜக்கையாபேட்டை, அமராவதி, பட்டிபிரோலு ஆகிய பகுதிகளில் காணப்படுகிறன

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • The Andhras Through the Ages by Kandavalli Balendu Sekharam

குறிப்புகள்[தொகு]

  1. Andhra Ikshvaku inscriptions
  2. Ancient India, A History Textbook for Class XI, Ram Sharan Sharma, National Council of Educational Research and Training, India , pp 212