ஏலூரு மாவட்டம்
ஏலூரு மாவட்டம்
ఏలూరు జిల్లా | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்ரல் 2022 |
தலைமையிடம் | ஏலூரு |
மண்டல்கள் | 28 |
அரசு | |
• சட்டமன்றத் தொகுதிகள் | 7 |
பரப்பளவு | |
• மாவட்டம் | 6,679 km2 (2,579 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மாவட்டம் | 39,36,966 |
• அடர்த்தி | 590/km2 (1,500/sq mi) |
• நகர்ப்புறம் | 8,08,777 |
மக்கள் தொகை | |
• பாலின விகிதம் | 1004 |
அஞ்சல் சுட்டு எண் | 534 XXX [1] |
வாகனப் பதிவு | AP-37 (பழையது) AP–39 (புதியது, 30 சனவரி 2019 முதல்)[2] |
நெடுஞ்சாலைகள் | NH-16, NH-216, NH-216A, NH-365BB, NH-516D, NH-516E |
இணையதளம் | https://eluru.ap.gov.in |
ஏலூரு மாவட்டம் (Eluru district), ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் ஏலூரு ஆகும். மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஏலூரு வருவாய் கோட்டம், ஜெங்கரெட்டிகுடேம் வருவாய் கோட்டம் மற்றும் கிருஷ்ணா மாவட்டத்தின் நுஸ்வித் வருவாய் கோட்டங்களைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[4][5][6][7][8]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]6411.56 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஏலூரு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 16,18,288 ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தவர்கள் 4,38,087 (21.87 %) உள்ளனர். இதன் எழுத்தறிவு 71.44% ஆகும்.
புவியியல்
[தொகு]6,679 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஏலூரு மாவட்டத்தின் வடக்கில் கம்மம் மாவட்டம் மற்றும் அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம், தெற்கில் மேற்கு கோதாவரி மாவட்டம் மற்றும் கொனசீமா மாவட்டம், கிழக்கில் கிழக்கு கோதாவரி மாவட்டம் மற்றும் மேற்கில் கோதாவரி ஆறும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]ஏலூரு மாவட்டம் ஏலூரு, ஜெங்கரெட்டிகுடேம் மற்றும் முழிவீடு என 3 வருவாய்க் கோட்டங்களாகவும், 28 மண்டல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஏலூரு மாநகராட்சி உள்ளது. இம்மாவட்டத்தில் 624 கிராமங்கள் உள்ளது.
மண்டல்கள்
[தொகு]ஏலூரு வருவாய் கோட்டம் 13 மண்டல்களையும், ஜங்காரெட்டிகூடம் வருவாய் கோட்டம் 10 மண்டல்களையும், நுசிவீடு வருவாய் கோட்டம் 6 மண்டல்களையும் கொண்டுள்ளது.
# | ஜங்காரெட்டிகூடம் வருவாய் கோட்டம் | ஏலூரு வருவாய் கோட்டம் | நுசிவீடு வருவாய்க் கோட்டம் |
---|---|---|---|
1 | ஜங்காரெட்டிகூடம் | ஏலூரு | நுசிவீடு |
2 | போலவரம் | தெந்துலூர் | லிங்கபாலம் |
3 | புட்டாயகூடம் | பெதவேகி | அகிரிபள்ளி |
4 | ஜீலுகுமில்லி | பெதபாடு | சத்திரை |
5 | கொய்யலகூடம் | உங்குட்டூர் | முசுன்னூரு |
6 | குக்குனூர் | பீமடோலு | சிந்தலபூடி |
7 | வேலேருபாடு | நிடமர்ரு | |
8 | காமவரப்புகோட்டை | கணபவரம் | |
9 | நரசாபுரம் | கைக்காலூரு | |
10 | துவாரகா திருமலை | மந்தவள்ளி | |
11 | காளிதிந்தி | ||
12 | முடிநெப்பள்ளி | ||
13 | தாடேபள்ளிகூடம் |
அரசியல்
[தொகு]ஏலூரு மாவட்டத்தில் ஏலூரு மக்களவைத் தொகுதி]]யும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது[9]. அவைகள்:
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pincode List
- ↑ "New 'AP 39' code to register vehicles in Andhra Pradesh launched". The New Indian Express (Vijayawada). 31 January 2019 இம் மூலத்தில் இருந்து 28 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190728113337/http://www.newindianexpress.com/cities/vijayawada/2019/jan/31/new-ap-39-code-to-register-vehicles-in-state-launched-1932417.html.
- ↑ A.P. to have 26 districts from 04 April 2022
- ↑ Andhra Pradesh adds 13 new districts
- ↑ Raghavendra, V. (26 January 2022). "With creation of 13 new districts, AP now has 26 districts". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220126110443/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/with-creation-of-13-new-districts-ap-now-has-26-districts/article38327788.ece.
- ↑ "AP issues draft gazette notification on 26 districts". தி டெக்கன் குரோனிக்கள் (in ஆங்கிலம்). 26 January 2022. Archived from the original on 29 January 2022. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
- ↑ "New districts to come into force on April 4". தி இந்து (in ஆங்கிலம்). 30 March 2022. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "కొత్త జిల్లా తాజా స్వరూపం". Eenadu.net (in தெலுங்கு). 31 March 2022. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "District-wise Assembly-Constituencies". ceoandhra.nic.in.