ஸ்ரீசத்ய சாய் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீசத்ய சாய் மாவட்டம்
[மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
நிறுவப்பட்ட நாள்4 ஏப்ரல் 2022
தோற்றுவித்தவர்ஆந்திரப் பிரதேச அரசு
பெயர்ச்சூட்டுசத்திய சாயி பாபா
தலைமையிடம்புட்டபர்த்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்https://srisathyasai.ap.gov.in

ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் (Sri Sathya Sai district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் அனந்தப்பூர் மாவட்டத்தின் தர்மாவரம், பெனுகொண்டா, கதரி மற்றும் புதிதாக நிறுவப்பட்ட புட்டபர்த்தி வருவாய்க் கோட்டப் பகுதிகளைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று நிறுவப்பட்டது.[1][2]

சத்திய சாயி பாபா நினைவாக நிறுவப்பட்ட ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் 7,771 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன், 17.22 இலட்சம் மக்கள் தொகையையும், 6 சட்டசபை தொகுதிகளையும், 3 வருவாய் கோட்டங்களையும் கொண்டுள்ளது.[3]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

7771 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் 4 வருவாய் கோட்டங்களும், 32 மண்டல்களும், தர்மாவரம், இந்துப்பூர், புட்டபர்த்தி மற்றும் கதிரி எனும் 4 நகராட்சிகளும் மற்றும் 425 ஊராட்சிகளும் கொண்டது.

மண்டல்கள்[தொகு]

# தர்மாவரம் வருவாய் கோட்டம் கதிரி வருவாய் கோட்டம் புட்டபர்த்தி வருவாய் கோட்டம் பெனுகொண்டா வருவாய் கோட்டம்
1 தர்மாவரம் கதிரி புக்கப்பட்டினம் பெனுகொண்டா
2 பத்தலப்பள்ளி தலுபுலா கொத்தசெருவு சோமன்டேபள்ளி
3 தடிமர்ரி நம்புலபுலகுந்தா புட்டபர்த்தி ரோத்தம்
4 முதிகுப்பா கண்டலபெண்டா நல்லமாதா இந்துப்பூர்
5 இராமகிரி நல்லாச்செருவு ஓபுளாதேவராச்செருவு சில்மாத்தூர்
6 கனகனபள்ளி தனக்கல்லு கொரந்தலா மதகாசிரா
7 சென்னை கொத்தப்பள்ளி அமதகுரு பரிகி
8 லேபட்சி
9 குடிபண்டா
10 ரோல்லா
11 அமராபுரம்
12 அகாலி

அரசியல்[தொகு]

ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் ஹிந்துபுரம் மக்களவைத் தொகுதியும்,ராப்தாடு சட்டமன்றத் தொகுதி (274), மடகசிரா சட்டமன்றத் தொகுதி (275), ஹிந்துபூர் சட்டமன்றத் தொகுதி (276), பெனுகொண்டா சட்டமன்றத் தொகுதி (277), புட்டபர்த்தி சட்டமன்றத் தொகுதி (278), தர்மவரம் சட்டமன்றத் தொகுதி (279), கதிரி சட்டமன்றத் தொகுதி எனும் 6 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]